உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரியில் சட்டவிரோத குவாரி; வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் சட்டவிரோத குவாரி; வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி மாவட்டம் உன்னியூர் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தொட்டியம் அருகே உன்னியூர் ரகுராமன், சுமதி தாக்கல் செய்த மனு:உன்னியூர் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி துவக்கக்கூடாது. ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர், திருச்சி தலைமைப் பொறியாளர், கலெக்டர், கனிமவளத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கணபதி சுப்பிரமணியன், கருணா ஆஜராகினர்.அரசு பிளீடர் திலக்குமார்,''தற்போதுவரை காவிரியில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை,'' என்றார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏதேனும் சட்டவிரோத மணல் குவாரி கண்டறியப்பட்டால், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க உரிமை உண்டு. அந்த அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். சட்டவிரோதமாக குவாரி நடத்திமணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை