உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரி நிர்ணயத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு மதுரை மாநகராட்சி முறைகேடால் உயர் நீதிமன்றம் அதிரடி

அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரி நிர்ணயத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு மதுரை மாநகராட்சி முறைகேடால் உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை:மதுரை மாநகராட்சியின் செயல் திட்டத்தை பின்பற்றி, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அசையா சொத்துக்களை மறு அளவீடு செய்து, வரி சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சொத்து வரி நிர்ணயத்தில் நடந்த முறைகேடு குறித்து, மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனு மீது, ஜூலை 17ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி, வரி நிர்ணய முறைகேடுகளை விசாரிக்க, மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஆக., 20ல் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மதுரை மாந க ராட்சி பகுதியிலுள்ள ஒட்டு மொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை அளவீடு செய்யும் பணி எவ்வளவு கால வரம்பிற்குள் மேற்கொள்ளப்படும். 'அதற்குரிய செயல் திட்டத்தை, கமிஷனர் ஆக., 26ல் தாக்கல் செய்ய வேண்டும்' என, கூறி இருந்தனர். இதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு இவ்வழக்கை நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேந்திரன், 'இவ்வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமினில் வெளியே சென்றுள்ளனர்' என, தெரிவித்தார். நீதிபதிகள், 'கைது செய்வது, ஜாமினில் செல்வது வழக்கமான நடைமுறை தான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பர். ஜாமின் அனுமதிக்கக்கூடாது என உங்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, தேவையெனில் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம்' என, தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் விநாயக் ஆகியோர் ஆஜராகி, கமிஷனரின் செயல் திட்டத்தை தாக்கல் செய்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 3 லட்சத்து 49,839 சொத்து வரி கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் ஜூலையில் திருமண மண்டபங்கள், வணிக கட்டடங்களில் ஆய்வு செய்தனர். அதில், 69 சொத்துக்களுக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்குரிய தொடர்ச்சி 6ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Paramasivaraj K
செப் 24, 2025 18:53

பழய வீடுகளுக்கு சுய சான்று அளவீடுகளில் மக்கள் செய்த தவறு மாநகராட்சி களப் பணியாளர்கள் செய்த தவறு போன்ற காரணங்களால் பல்வேறு குழப்பங்கள் அதனால் கட்டிடம் உள்ள அளவைவிட இருமடங்கு க்கு வரி கட்டுகிறார்கள் சிலர் கட்டிய வீட்டின் ஒரு பகுதிக்கே மீண்டும் புதிதாய் தெரியாமல் புதிய வரியை போட்டு விட்டார்கள் இதற்க்கெல்லாம் காரணம் அரசு சுய சான்று விண்ணப்பம் என்று புதிதாக அறிமுகப் படுத்தி விண்ணப்பம் வீடுகளில் கொடுத்ததில் நிறயபேருக்கு புரியாமல் பூர்த்தி செய்து கொடுத்ததால் தான் இந்த குழப்பம்.... அரசு மனது வைத்து இந்தக் குழப்பத்திற்க்கெல்லாம் பரிகாரமாக மக்கள் இதை சரிப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் வரிவிதிப்பு க்குள் வந்த அளவீட்டிற்கே மீண்டும் புது வரியை விதித்ததை ரத்து செய்யவும் அரசு மக்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை