வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதுபோன்று வாய்க்குவந்ததை தீர்ப்பாக சொல்லி அரசு பணத்தை தெண்டசம்பளமாக வாங்கிக்கொண்டு போகும் நீதிபதிகள் நமது நீதிதுறையில் பலர் உள்ளனர். தீர்ப்பு வெளிவந்தபின் அதை ரெவியூ செய்ய அரசு ஒரு அமைப்பை நிறுவவேண்டும். தீர்ப்பு ஆபத்தமாக இருந்தால் தெண்டசம்பள நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கலாம்.
மீண்டும் ஒரு தப்பான தீர்ப்பு .
அரசின் கடமையை எடுத்து சொல்ல ஐகோர்ட் தயங்குவது ஏன் ?
கழிவுகளை அகற்ற வேண்டியது அரசின் கடமைன்னு சொல்லத் துப்பில்லை. வரி வாங்கித்தானே இவிங்களுக்கும் சம்பளம் குடுக்குறாங்க?
இரண்டு மூன்று கோணங்களில் பார்த்தால் இந்த தீர்ப்பு தவறானது என்று தோன்றுகிறது ... முதலாவதாக, நகராட்சி vendor என்பது மக்களுக்கு client, பொருட்களையோ product அல்லது சேவையையோ service அளித்து, அதற்கு கட்டணத்தைப் பெறும் ஒரு நிறுவனம். சொத்துவரி என்பது நகராட்சிக்கு செலுத்தப்படும் கட்டணம். அந்த கட்டணத்திற்கு நகராட்சி சேவையாக அளிக்க வேண்டியது குடிநீர், கழிவு நீரகற்றம், தரமான சாலைகள் போன்றவை. எனவே கட்டணத்தை வசூலித்துக்கொண்டு, அதற்கு உரிய சேவையான கழிவுநீரகற்றும் கட்டமைப்பை தராதது "சேவை குறைபாடு deficiency of service என்பது போலத்தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் காணப்படும்.. அதற்கு நகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நுகர்வோர் அல்ல. இரண்டாவதாக, ஒரு சேவைக்கு தனி கட்டணம் வசூலித்து அதற்கு தனது ஊழியர்களை அனுப்பும் போது, நகராட்சி ஒரு ஒப்பந்ததாரராக contractor ஆகிவிடுகிறது. ஒப்பந்ததாரரின் ஊழியர்களின் ஊதியம், காப்பீடு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒப்பந்ததாரர்தான் பொறுப்பாக முடியும். வாடிக்கையாளர் அல்ல. உதாரணத்துக்கு வீட்டிற்கு வர்ணம் paint அடிக்க வரும் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களுக்கான எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். எனவே வாடிக்கையாளர்களை இந்த பொறுப்பாக்கும் இந்த தீர்ப்பு குறைபாடானது ...
சுத்தம் செய்தது சென்னை மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அவர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டியது, அவர்களை பாதுகாக்கவேண்டியது மாநகராட்சியின் கடமை. இதில் உரிமையாளர் ஏன் கொடுக்க வேண்டும். நாட்டாமை தீர்ப்பு புரிபடவில்லையே
தவறான தீர்ப்பு.
அரசு கள்ளச்சாராயம் காய்ச்சவில்லை - ஆனால் அரசாங்கம் பணத்தை அள்ளிக்கொடுத்தது. இங்கு அரசாங்கம் அடிப்படை வசதிகளை செய்யாமல் காமடி செய்து விட்டு ஊழியர் மரணம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்தான் பொறுப்பு என்கிறது. ஏற்கனவே மனிதர்களை இது போன்ற பணிகளுக்கு உபயோகிக்கக்கூடாது என்று தெரிந்தும் அரசு எப்படி அனுமதிக்கிறது - ஒருவேளை ஜாதிவன்மமாகக்கூட இருக்கலாம்.
இது எப்படி தனியாரின் தவறாகும். கழிவு நீர் தொட்டி கட்ட அவர் அளித்த மனுக்கள் ஏன் ஏற்கப்படவில்லை. கழிவு நீரை தெருவில் கொட்டினால் மட்டும் அரசாங்கம் ஏற்குமா ? உயிரிழந்தவர் மாநகராட்சி ஊழியர் தானே ஏன் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உள்ளே இறங்கினார். ? அவருக்கு மாநகராட்சி உபகரணங்கள் வழங்கப்படவில்லையா ? மனித கழிவை மனிதன் அகற்ற கூடாது என்ற விதி உள்ளதே. பிறகு ஏன் இயந்திரங்கள் இல்லாமல் மனிதன் இறங்கி சுத்தம் செய்கிறான் ? இப்படி தனியார் பொறுப்பு என்று தட்டி கழிக்க ஏன் வரி வாங்குகிறீர்கள் ?
ஒரு கேவலமான தீர்ப்பு , மக்களுக்கு அடிப்படை வசதி செய்துதரமல் ஏமாற்றும் அரசியல்வாதிகளை தண்டிக்க துப்பில்லை , இவங்களுக்கெல்லாம் வக்கீல் பட்டம் கொடுத்தது யாரு