உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

சென்னை: சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், பிப்., 18ம் தேதி சென்னை தங்கசாலையில் உள்ள, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை செல்ல அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்தரசு ஆஜராகி, ''ஹிந்துக்களுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில், சென்னையில் கந்தகோட்டம் முருகன் கோவிலை நோக்கி, அமைதியான முறையில், வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியும், போலீசார் அனுமதிக்கவில்லை,'' என்றார்.காவல் துறை தரப்பில், 'தற்போது வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரும் மின்ட் பகுதி, போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலையின் உரிமை தொடர்பாக, ஏற்கனவே, 'பிரிவியூ கவுன்சில்' வரை சென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும், மத நல்லிணக்கத்துடன் சமூக ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, இந்த ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது. பொது அமைதி, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை பேணப்பட வேண்டும்,' என வாதிடப்பட்டது. இதையடுத்து, 'திருப்பரங்குன்றம் மலையை காக்க, சென்னையில் பேரணி செல்ல வேண்டிய அவசியம் என்ன?' என, நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தீர்ப்பை ஒருதினத்திற்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில், சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க அனுமதி மறுத்த சென்னை ஐகோர்ட், பாரத் இந்து முன்னணி யுவராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M S RAGHUNATHAN
பிப் 14, 2025 18:23

எங்கேயோ டென்மார்க்கில் யாரோ ஒருவன் நபிகள்.நாயகம்.பற்றி கார்ட்டூன் வரைந்ததற்கு சென்னையில் போராட்டம்.நடை பெற்றது. Gaja வில் நடைபெறும் சண்டையில், இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் கண்டன பேரணி. காஷ்மீரில் அசீபா என்ற ஒரு பெண்ணுக்கு துயரம் ஏற்பட்டபோது இங்கு சென்னையில் ஏன் போராட்டம் ? அதைப் பற்றி ஏன் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை. அதே போல் ஹத்ரஸ், கல்புர்கி ஆகியவை தமிழ் நாட்டிலா இருக்கிறது ? இலங்கையில் நடந்த போராட்டங்களுக்கு தமிழ் நாட்டில் ஏன் கதவடைப்பு, முதல்வரின் 2 மணி நேர உண்ணாவிரதம். அதற்கு உயர்நீதி மன்றம் தடை விதிக்கவில்லையே ? ஏன் ? உயர் நீதி மன்றம் பயந்ததற்கு என்ன காரணம். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று காவல் துறை சொன்னால், அதற்கு அந்த துறையை தான் கண்டிக்க வேண்டும். மக்களின் போராட்டத்தை தடுக்க கூடாது.


angbu ganesh
பிப் 14, 2025 17:21

ஒரு வேல வேலுக்கு பதில் சந்தன கூடு யாத்திரைக்கு அனுமதி வேண்டும் என்றால் கொடுத்திருப்பாரோ என்னவோ என்னவோ யுவர் ஹானோர்


sankaranarayanan
பிப் 14, 2025 13:47

ஆளும் கட்சியின் அனுக்கிரஹத்தோடு யார் என்ன செய்தாலும் நீதி மன்றம் கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கும் ஆனால் எதிர் கட்சிகள் அல்லது சாமானிய மக்கள் திரண்டு ஒரு அமைதி பேரணி செய்தால் நீதி மன்றமே முன் வந்து அதற்கு தடை விதிக்கும்


Ramesh Sargam
பிப் 14, 2025 13:33

நீதிமன்ற நீதிமான்கள் திமுக குண்டர்களால் மிரட்டப்பட்டிருக்கலாம்.


R.Balasubramanian
பிப் 14, 2025 13:18

உயர் நீதிமன்றம் கொத்தடிமை கட்சியின் நீட்சியாக செயல்படுகிறது


rajasekaran
பிப் 14, 2025 12:06

கணம் நீதிபதி அவர்களே, எங்கையோ வெளி நாட்டில் நடந்த சம்பவத்திற்கும் மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கும் இங்கு சென்னையில் போராட்டம் நடத்தலாம் ஆனால் நம் தமிழ்நாட்டில் நம் கண் முன்னே நாடாகும் அணியாத்திற்கு இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லையாம். எல்லாம் இப்பொது ஒன்னும் தெரியாது என்றிக்காவது ஒரு நாள் தான் தெரியும். அதற்கு அப்புறம் ஒன்னும் செய்யமுடியாது.


T Jayakumar
பிப் 14, 2025 11:57

உ.பி. யில், காஷ்மீரில், காசா வில் ஏதாவது நடந்தால் ஊர்வலம் நடத்தலாம். அனுமதி உடனே கிடைக்கும்


M S RAGHUNATHAN
பிப் 14, 2025 11:51

சட்டத்தை காப்பாற்ற வேண்டிய நீதி மன்றமே எதிராக செயல் படுகிறது. நாளை ஒரு சார்பினர் மணிப்பூர் அல்லது அஸ்ஸாம் அல்லது உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடை பெற்ற சம்பவங்களுக்கு கண்டன பேரணி, ஊர்வலம் நடத்த அணுமதிப்பார்களா மாட்டார்களா? காவிரி நீர், முல்லை பெரியார் பிரச்சினைக்கு சென்னையில் போராட்டம் நடத்த இனி அனுமதி கிடையாதா? அப்படிகொடுத்தால், இப்போது நீதி மன்றம் ஒரு சார்பாக தடை விதித்தது என்று பழி வரும். நாளை தஞ்சாவூரில் டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா கிடைக்காதா ? வெளியூரில் இருக்கும் ஒரு பெரிய தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு பாதகமாக நடந்தால், சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாதா? தற்சமயம் மீண்டும் சாம்சங் தொழிற்சாலையில் போராட்டம் தொடங்கி இருக்கிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஶ்ரீ பெரும்பூதூர் வேறு இடத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காவல் துறையும், நீதி மன்றங்களும் உத்தரவிடுமா இனிமேல். நீதிபதி இதுபோல் மற்ற மதத்தவர் போராட்டம் செய்ய விரும்பினால் இதே உத்தரவை போடுவாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை