வாசகர்கள் கருத்துகள் ( 2 )
We can expect the result of the case in 2031
அட சே , போங்கப்பு
சென்னை : தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி., நவாஸ் கனி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது கமுதி பகுதியில், மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத வாகனத்தில், அவர் பிரசாரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, நவாஸ் கனி உட்பட ஏழு பேருக்கு எதிராக, கமுதி போலீசார், தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்தனர். ராமநாதபுரம் நீதிமன்றத்தில், இந்த வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எம்.பி., நவாஸ் கனி, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏழு பேர் மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'எந்த குற்றமும் செய்யாத நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.இம்மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது, 'வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், நவாஸ் கனி பெயர் இடம் பெறாவிட்டாலும், தொடர் விசாரணையில், அவரது தொடர்பு என்பது வழக்கு ஆவணங்கள் வாயிலாக கண்டறியப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், குற்றச்சாட்டு களுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், வழக்கை ரத்து செய்ய முடியாது' எனக் கூறி, நவாஸ் கனி உள்ளிட்டோரின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
We can expect the result of the case in 2031
அட சே , போங்கப்பு