உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hhvev5m5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது: * பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. * சைவ, வைணவ சமய குறியீடுகளை பயன்படுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசியது ஏற்க முடியாது.* வெறுப்பு பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. * உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக போலீசார் அமல்படுத்தவில்லை. நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. * சைவ, வைணவ சமயங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.* சைவ சமயத்தின் விபூதி, பட்டையும், வைணவத்தின் நாமமும் புனிதமானது.* புனிதமான பட்டை, நாமத்தை விலைமாது சேவையுடன் அமைச்சர் பொன்முடி ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.* மத உணர்வுகளை பாதிக்கும் வகையில் பொன்முடி பேசி உள்ளார்.* ஆபாசம் மட்டுமல்ல. இரண்டு சமய மக்களையும் புண்படுத்தும் வகையில் பொன்முடி பேசி இருக்கிறார்.* அமைச்சராக இருப்பதால் பொன்முடிக்கு போலீசார் சலுகை வழங்க முடியாது.* பேசியதை அமைச்சர் பொன்முடி ஒப்புக்கொண்டு உள்ளார். கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்?என நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதையடுத்து, ''பொன்முடி சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Siva Balan
ஏப் 24, 2025 07:28

இவனையெல்லாம் பயங்கரவாதிகள் லிஸ்டில் சேர்த்து தூக்கிலிட வேண்டும்.


Karuthu kirukkan
ஏப் 24, 2025 06:52

அப்படி போடு அருவாள, செத்தான் சேகரு ...ஓசி , ஓசி


Balasubramanian
ஏப் 24, 2025 06:01

அப்படியே இந்த கொசு ஒழிப்பு கேஸிலும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேளுங்கள் யுவர் ஆனர்! ரொம்ப வருடமாக கிடப்பில் கிடக்கிறது!


c.mohanraj raj
ஏப் 24, 2025 00:46

கொடுத்த தண்டனையை நிறுத்தி வைக்காமல் இருந்திருந்தாலே இந்த திமிர் வந்திருக்காது என்ன செய்தாலும் விடுதலை ஆகும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள் இதற்கு முழுமுதற் பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும்


சிந்தனை
ஏப் 23, 2025 21:26

நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வருவது சம்பளம் வாங்க தான் சேவை செய்யவில்லை யாராவது வேலை இல்லாதவர்கள் பொதுநல வழக்கு தொடுத்தால் அதற்கு மட்டும் சொல்லிக்கொண்டு தள்ளி வைத்துக் கொண்டு பொறுமையாக தீர்ப்பு சொல்லிக்கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருங்கள்


RRR
ஏப் 23, 2025 20:16

ஆபாசமான கீழ்த்தரமான கேவலமான வக்கிரமான சிந்தனை உடையவர்களின் கூடாரம்தான் திருட்டு உருட்டு திமுக. கீழ்த்தரமானவர்கள் தான் திமுகவுக்கு வோட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்திவிட்டு பின்னர் புலம்புவார்கள்...


venugopal s
ஏப் 23, 2025 20:06

மத்திய பாஜக இணை அமைச்சர் ஷோபா கராண்ட்லாஜே தமிழர்களை திருடர்கள் என்று பேசி விட்டு அதற்கு மன்னிப்பு கேட்டது போல் பொன்முடியும் தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். அதனால் நீதிமன்றம் இவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்து விடுவார்கள். அவ்வளவு தான்!


Nagarajan D
ஏப் 23, 2025 19:42

எப்ப அவருக்கு ஜாமீன் உத்தரவு தருவீங்க.... தீர்ப்புகள் விற்கும் நாடு நம் நாடு...


GoK
ஏப் 23, 2025 19:40

மாதம் ₹1000, வரும் வருடம் தேர்தல் போனஸ் ₹5000+, பிரியாணி, சாராயம், புடவை...அமைதி எவ்வளவு வேணும்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 23, 2025 20:51

இத்தனையும் கொடுத்து பல்லிளிக்க வாங்கியவர்களிடம் வரும் தேர்தலில் பட்டையா நாமமா என்று திமுக காரன் ஓட்டு கேட்டு வருவான். அதற்கும் பல்லிளிக்கும் தமிழகம்


டில்லிகுமார்
ஏப் 23, 2025 19:08

வழக்குப்.பதிவில் இருக்கும் சூரத்தனம் விசாரிப்பதிலோ, தீர்ப்பு கொடுப்பதிலோ இருப்பதில்லை. தப்பித் தவறி இவிங்க தீர்ப்பு கொடுத்தாலும், அதை நிறுத்தி வெச்சு நாட்டாமை பண்ண உச்சநீதி மன்றம் இருக்கே. நாடு எப்புடி விளங்கும்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 23, 2025 20:55

முடி வீட்டில் கேட்பார்கள் அவர்கள் சரி சொன்னால் வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை