உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்செந்தூர்: திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சில அங்கீகாரமற்ற நபர்கள், புரோக்கர்கள் பக்தர்களிடம் தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதைத் தடுக்க உத்தரவிட ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0t3i8ezw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:* சட்டவிரோத டிக்கெட் விற்பனையை தடுக்க அறநிலையத்துறை, போலீஸ் நடவடிக்கை வேண்டும்.* முறைகேடு குறித்து போலீசார் வழக்கு பதியவேண்டும், கூடுதல் போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த தூத்துக்குடி எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்.* சட்டவிரோதமாக டிக்கெட் விற்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Somasundaram Raja
ஆக 30, 2025 09:27

எல்லா வகையான சட்ட ஒழுங்கு மீறல்கள் செய்வது தீட்சிதர்களே. அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஆணைகளுக்கு கட்டுபடுவதே இல்லை என்பது தான் உண்மை நிலை. ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக தீட்சிதர்கள் செந்தில் ஆண்டவர் சன்னதி மற்றும் கோயில் வளாகத்தில் வரும் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி இருக்க செய்வது தனது தலையாய கடமை என்பது போல பணம் வேண்டி அடாத செயல்களை செய்யும் போது என்ன செய்ய. நீதிமன்றம் விதித்த ஆணைகளை கூட மிகவும் எளிதாக மீறுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை