உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து சிலிர்த்து எழ வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு

ஹிந்துக்கள் சிங்கமாக விழித்து சிலிர்த்து எழ வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீவில்லிபுத்துார்: ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும். சனாதன தர்மத்தை இழித்து பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த திருப்பாவை முற்றோதல் மாநாட்டில் சடகோப ராமானுஜ ஜீயர் பேசினார்.ஜீயர் பேசியதாவது: ஆண்டாள் தாயார் இல்லையெனில் உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சி ஆகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்பது எங்கள் கருத்து.அதே நேரம் சனாதன தர்மத்தையோ, ஹிந்து மதத்தையோ இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனைக் கண்டு ஹிந்துக்கள் விழித்து, சிலிர்த்து எழ வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sivak
ஜன 01, 2024 22:46

மௌலிவியும் பாதிரியும் தங்கள் மத மக்களை முட்டாளாக்கி மத வெறி பிடிக்க வெச்சி ரேபிஸ் வந்த குரங்கு போல் எல்லாரையும் கடிக்க சொல்றாங்க... நீங்க அப்படி செய்ய வேண்டாம் குறைஞ்சது இந்து மத உணர்வு மக்களிடம் ஏற்படுத்தி நம் மதத்தையும் கலாச்சாரத்தையம் பண்பாட்டையும் காக்க முடிஞ்ச அறிவுரைகளை மக்களுக்கு போதனை செய்யுங்கள்.... நம் மதத்தை ஒருவர் தவறாக சொல்லும்போது குறைஞ்சது எதிர்த்து கேள்வி கேட்கவாவது செய்ய வேண்டும்... அதற்க்கு என்ன உபதேசம் செய்யமுடியுமோ அதை செய்ய வேண்டுகிறேன் ...


Seshan Thirumaliruncholai
ஜன 01, 2024 20:03

சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது என்ற நமது மமதை யானை தன தலையில் மண்ணை போட்டதுபோல். மதபோதகர்கள் சாமியார்கள் எல்லோரும் சிறிது கீழ் இறங்கிவந்து விவேகானந்தர் போல் மக்களை சந்திக்கவேண்டும். ஹிந்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஆண்டவன் பக்தியாய் எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் இது சேரவேண்டிய இடத்திற்கு செல்வதில்லை.


vbs manian
ஜன 01, 2024 18:16

இன்றைய நிலையில் ஸ்ரீ ராமானுஜர் இருந்தால் என்ன செய்திருப்பார். சொல்லுங்கள்.


திகழ்ஓவியன்
ஜன 01, 2024 19:30

எல்லோரும் அர்ச்சகர்கள் என்று ஆகி இருப்பர்


K.P SARATHI
ஜன 01, 2024 16:30

கோவிலுக்குள் செல்லும் இந்துக்கள் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும், மேலும் ஆன்மிக சொற்பொழிவு நதவேண்டும், உண்டியலில் பணம் போடுவதற்கு பதில் ஏழை இந்துக்களுக்கு உதவி செய்யவேண்டும்


P Sankar
ஜன 01, 2024 14:52

நாங்க விழித்து கொண்டோம்.. நீங்களும் வீதிக்கு வாங்க. சேர்ந்து போராடலாம்


Raj Kamal
ஜன 01, 2024 14:20

அதற்க்கு நீங்கள் ஒன்றுபட வேண்டும்.சும்மா பெயரளவில் இல்லாமல், உங்கள் உள்ளத்தில் இருந்து வரவேண்டும்.


Indian
ஜன 01, 2024 13:55

ஹிந்துக்களுக்கு யார் விரோதிகள் கொஞ்சம் விளக்கம் தேவை


Raj Kamal
ஜன 04, 2024 14:33

ஹிந்துக்களுக்கு யார் விரோதிகள்? இந்துக்கள் தான் சாதியால் பிளவு படுத்தப்பட்டுளோம். சக இந்து சகோதர, சகோதரிகளை நாம் பிறப்பால் ஒடுக்கி வைத்துள்ளோம் என்பதே உண்மை


R. SUKUMAR CHEZHIAN
ஜன 01, 2024 11:48

ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் போன்ற வீர துறவிகள் தான் நமது ஹிந்து தர்மத்தின் வழிகாட்டிகள். ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளை வணங்குகிறேன்.


Rajagopal
ஜன 01, 2024 10:31

இல்லையென்றால் இந்துக்கள் அழிக்கப்படுவார்கள். இப்போதாவது புத்தி வரட்டும். நமக்கு வேறு வழியில்லை. நல்லவர்களாக இருந்தால் எவனும் மதிப்பதில்லை. தடி எடுத்தவன்தான் தண்டல்காரன்.


Sampath Kumar
ஜன 01, 2024 10:31

வேடிக்கை பார்ப்பது தானே நம்ம வாடிக்கை


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி