உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துத்துவா, கார்ப்பரேட் கூட்டணி போராடி தோற்கடிக்க வேண்டும்: பிரகாஷ் காரத்

ஹிந்துத்துவா, கார்ப்பரேட் கூட்டணி போராடி தோற்கடிக்க வேண்டும்: பிரகாஷ் காரத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : பா.ஜ. ஆளாத மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது, என மதுரையில் துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூ., 24வது அகில இந்திய மாநாட்டில், அக்கட்சி அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

மாநாட்டில் பிரகாஷ் காரத் பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாகவும் கூட்டணி அமைத்தும் செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., அங்கமாக பா.ஜ., செயல்படுகிறது. இக்கூட்டணி தான் நாட்டில் ஹிந்துத்துவா - கார்ப்பரேட் உறவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன்மூலம் கருத்தியல், கலாசாரம், சமூக துறைகளில் ஹிந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை போராடி தோற்கடிக்க வேண்டும். பா.ஜ., ஆளாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில், திரிபுரா மாநில மாணிக்க சர்கார், கட்சியின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பிருந்தா காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஏப் 03, 2025 19:38

கம்மிகள் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்..... இவர்களை நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்...... கான் கிராஸ் கட்சி கட்சிக்கு எதிராக கட்சி ஆரம்பித்து விட்டு.... பிறகு அதே கான் கிராஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் ???


vijai hindu
ஏப் 03, 2025 16:42

இந்த ஆள் எல்லாம் உள்ள விட்டதே தப்பு ஊரை நாசம் பண்றதுக்கு புறப்பட்டு வந்துட்டானுங்க


naranam
ஏப் 03, 2025 14:10

பேச வந்துட்டார். அடுத்துக் கெடுப்பவர்கள் இவர்கள்.


Ramaswamy Jayaraman
ஏப் 03, 2025 13:13

இவர்களே கார்போரேட்டுகள்தான். கட்சி ஆரம்பித்த நாள் முதலே காசு கொடுத்து வேலைக்கும், கோடி பிடிக்கவும் ஆட்களை கூப்பிடுவார்கள். இது எனக்கு தெரிந்து 60 வருடங்களாக நாடி பெறுகிறது. தொழிற்சங்கம் என்ற பெயரில் முதலாளிகளிடம் மற்றும் தொழிலாளிகளிடமும் பணம் வாங்கிக்கொண்டு பிழைப்பு நடத்தும் கூட்டம்


sridhar
ஏப் 03, 2025 11:32

ஓஞ்சிப்போன கட்சியின் ஓஞ்சிப்போன தலைவர் சொல்லிட்டாரு . போவியா


கண்ணன்
ஏப் 03, 2025 10:47

நல்ல ஒரு ஜோக்கர் இவர் கூட்டணிக்கட்சிகள் கார்ப்ரேட் கட்சிகள் அல்லாமல் என்னவாம்? ஊருக்கு உபதேசிகள் பொய்யர்கள் நாட்டு நலனைவிட சீன நலனே பெரிது என நினைப்பவர்கள் எப்படியாவது எந்தப் பொய்யையாவது பலமுறை சொல்லி நாட்டைச் சீனாவிடம் அடகு வைக்க முனைபவர்கள்


Madras Madra
ஏப் 03, 2025 10:44

சீனாலேயே உங்க கட்சி காலாவதி ஆகப்போகுது அங்க ஜனநாயகம் இல்லே இந்த அளவு கேடு கேட்ட கொள்கை கம்மி உங்களோடது இங்க வாய்க்கு வந்ததை பேசி பொழுதை போக்குது


M Ramachandran
ஏப் 03, 2025 10:01

நீங்கள் நாட்டு பற்று அற்றவர்கள். சீனாவிற்கு வால் பிடிக்கிறீர்கள். ஊரோடு ஒத்து வாழ் என்பது கிடையாது. ஒட்டு வாங்கி + சேர்வார் தோக்ஷம் அதாவது ஸ்டாலின் + ராவுளு கம்பெனி ஹிந்துக்களை எதிர்த்து பிரச்சாரம். இங்குள்ளவர்களுக்கு உங்கள் கொள்கை பிடிக்க வில்லை. ஒட்டுண்ணி


M Ramachandran
ஏப் 03, 2025 09:54

இப்போ மக்கள் உங்களைதான் நாட்டை விட்டு துரத்தி கொண்டிருக்கிறார்கள். வங்காளத்திலிருந்து விரட்டிவிட்டனர். இங்கு தமிழ்நாட்டில் ஐயா பிச்சை போடுங்க மாதிரி தீ முகா விற்கு ஜால்றா போட்டுக்கிட்டு கிடைய்ய பாதையை வாங்கி காலம் தள்ளுகிறீர்கள். கூடிய விரையவில் கேரளத்திலிருந்தும் விரட்ட படுவீர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 09:50

பாஜகவை மேலும் மேலும் வளர்த்து விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ..... என்ன பண்ண ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை