உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்க: ஸ்டாலினை தொடர்ந்து மம்தாவும் கடிதம்

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்க: ஸ்டாலினை தொடர்ந்து மம்தாவும் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், இதே கோரிக்கையுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1ம் தேதி அமலாகிறது. 'இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' எனவும், 'இந்த சட்டங்களில் பிழைகள் இருப்பதாகவும்' குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 18ல் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், '146 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம். எனவே இந்த மூன்று சட்டங்களையும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஜூன் 21, 2024 19:48

புதிய சட்டத்தில் தண்டனை அதிகமாக இருப்பதால், திருடனுக்கு தேள்கொட்டியதை போன்று மம்தாவும் ஸ்டாலினும் துடிக்கிறார்கள்.


Thiruvengadam Ponnurangam
ஜூன் 21, 2024 17:24

இந்த கூட்டம் எதிர்க்குதுன்னா முதலை அதனை அமல் படுத்துங்க மோடி அய்யா. இதுக்கா ரெண்டும் வந்து வக்காலத்து வாங்கினால அது தேசத்துக்கு நல்லதுன்னு எடுத்துக்கலாம்


HoneyBee
ஜூன் 21, 2024 16:29

இவுக எதிர்த்தா அது கட்டாயம் நாட்டுக்கு நல்ல சட்டம் தான். உடனே அமல் படுத்த வேண்டும்


Kumar
ஜூன் 21, 2024 16:24

இந்த சட்டங்களை இவர்கள் எதிர்ப்பதை வைத்து பார்த்தால், இது மிக மிக நல்ல சட்டங்கள் என அடித்து கூற முடியும்......


vijai
ஜூன் 21, 2024 16:19

திருடனுக்கு தான் பயம் வரும்


Bala Paddy
ஜூன் 21, 2024 16:09

அடக்கவில்லை என்றால் வங்கம் காஷ்மீர் ஆகும்.


vijay
ஜூன் 21, 2024 16:01

நிச்சயமாக அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல் குற்றவாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும், ரவுடிகளும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த சட்டங்கள் பற்றி சில அருமையான காணொளிகள் உண்டு. சங்கிகள் சங்கிகள் என்று அரற்றுவதை விட்டுட்டு, பாண்டே போன்றோரின் காணொளிகள் உண்டு. அதை பார்த்தீர்கள் என்றால், ஏன் இந்த மேற்கண்ட இண்டி கூட்டணி தலைவர்கள் கதறுகிறார்கள் என்று தெளிவாக தெரியும்.


Duruvesan
ஜூன் 21, 2024 15:55

370 எதிர்த்த கூட்டம்,


தத்வமசி
ஜூன் 21, 2024 15:05

இவங்களுக்கு நாடு எப்படி போனால் என்ன ? நாம கல்லா கட்டனும்.


RAJ
ஜூன் 21, 2024 14:31

அப்போ உடன் நிறைவேத்தனும். இந்த அம்மா பங்களாதேஷ் ஆளுங்கள கொல்கத்தாவுக்கு குடியாத்தம விடாது .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை