உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோட்ச தீபம் ஏற்றி திருச்செந்தூரில் வழிபாடு

மோட்ச தீபம் ஏற்றி திருச்செந்தூரில் வழிபாடு

தூத்துக்குடி: மும்பை குண்டுவெடிப்பில் பலியானர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, திருச்செந்தூரில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது. மும்பையில் நேற்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 18 பேர் பலியாயினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதில், பலியானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இந்து முன்னணி சார்பில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கடையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், அது சண்முக விலாச மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை