உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை

டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான கிராம மக்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில், சில மாதங்களுக்கு முன், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இடுக்கொரை பகுதியைச் சேர்ந்த துரை, ஆனந்தி தம்பதியின், 3 வயது மகள் தேன்மொழிக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நேரத்தில், மூன்று முறை மின்தடை ஏற்பட்டது. இதனால், 'டார்ச் லைட்' வெளிச்சத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.இந்நிலையில், மின்தடை ஏற்பட்ட நேரத்தில், 'டார்ச் லைட்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதை சிலர், 'வீடியோ' பதிவு செய்து நேற்று வெளியிட்டனர்.அதைப் பார்த்த, கோத்தகிரி அரசு மருத்துவமனை டாக்டர் சிவகுமார் கூறுகையில்,''சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் மின்தடை ஏற்பட்டபோது, 'ஜென்செட்' அமைந்துள்ள அறைக்கு சென்று, ஜென்செட்டை ஆபரேட்டர் ஆன் செய்வதற்குள், 'வீடியோ' எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பரவ விட்டவர்கள் செயல் வருத்தம் அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
நவ 14, 2024 11:39

முன்னேறிய மாநிலம்..... சங்கிகள் பொறாமைப்படக் கூடாது ......


Raj
நவ 14, 2024 10:24

எல்லா சம்பவத்திலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. திராவிட முயற்சியால். வாழ்க திராவிடம்.


chennai sivakumar
நவ 14, 2024 10:14

3 கோடி ரூபாயில் புனரமைப்பு செய்யபட்டதாம். ஆனால் தானியங்கி ஜெனரேட்டர் இல்லையாம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 08:44

மின்தடை ஏற்பட்டபோது, ஜென்செட் அமைந்துள்ள அறைக்கு சென்று, ஜென்செட்டை ஆபரேட்டர் ஆன் செய்வதற்குள், வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பரவ விட்டவர்கள் செயல் வருத்தம் அளிக்கிறது" என்று தெளிவாக செய்தியில் போட்டிருக்கிறது. ஆனாலும் இனவெறி கூட்டம், திராவிட ஆட்சி விடியல் என்று கூவிக் கொண்டிருக்கிறது. போங்கடா டேய்... வேற வேலை இருந்தா பாருங்க.


pandit
நவ 14, 2024 07:41

வாழ்க திராவிஷம்


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2024 06:33

பப்லிசிட்டிக்கு அலையும் பன்றிகள் என்று கொள்வதா , ஜென்செட் பணத்தை திருடி விட்டனர் என்று கொள்வதா, உண்மையை உரக்க சொல்லும் திறம் தினமலருக்கு மாத்திரம் தமிழகத்தில் உள்ளது , அதனையும் சொல்லிவிடுங்க தினமலர் நிருபரே


KRISHNAN R
நவ 14, 2024 07:58

அப்பி டி யெல்லாம் இல்லீங்க ...


Kasimani Baskaran
நவ 14, 2024 06:25

வார்த்தை ஜாலத்தால் ஜெயிக்கக்கூடிய விஷயம்தான். மின்வடை, மின்தடை என்று ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம்.


nv
நவ 14, 2024 06:11

விடியா அரசின் இலட்சணம்.. மக்களுக்கு பிரியாணியும் குவார்ட்டர் பாட்டில் கொடுத்து ஏமாற்றுவது தான் திருட்டு திராவிட மாடல்!!


INDIAN
நவ 14, 2024 07:59

Why are government hospitals condition so bad in Uttar Pradesh?


Nandakumar Naidu.
நவ 14, 2024 05:52

பொய் சொல்லுறீங்க? மருத்துவ மனையில் ஜெனரேட்டர்கள் தானியங்கி சிஸ்டம் தானே அமல் செய்யவேண்டும்? ஏன் ஆன் ஆஃப் செய்கிறீர்கள்?


Mani . V
நவ 14, 2024 05:37

இதை நீங்கள் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். டார்ச் லைட் வெளிச்சத்தில் கூட மருத்துவ சேவை செய்யும் மாடல் என்று பார்க்க வேண்டும். ஓக்கே? ஆமா, அந்த கோடியை ஆட்டையைப் போட்டது யாரு?


சமீபத்திய செய்தி