உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., மட்டும் கூட்டம் நடத்தியது எப்படி? அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கேள்வி

 தி.மு.க., மட்டும் கூட்டம் நடத்தியது எப்படி? அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு உண்டான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு, தி.மு.க.,வுக்கு மட்டும் அனுமதி எப்படி கிடைத்தது,'' என, ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கேள்வி எழுப்பினார். அதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:

பிரசாரம் என்பது, தேர்தல் நடைமுறைகளில் மிகவும் முக்கியமானது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு அதன் வாயிலாகத்தான் கிடைக்கும். கரூர் சம்பவத்திற்கு பின், தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, தேர்தல் பிரசார வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனாலும், இதுவரையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால், அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பொதுக் கூட்டமோ, பேரணியோ நடத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களிடம் சென்று பிரசாரம் செய்ய முடியவில்லை. ஆனால், தி.மு.க.,வுக்கு மட்டும், திருவண்ணாமலையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, நடத்தி உள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதிக்கும் அரசு, தி.மு.க.,வுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்காதது ஏன்? ஈரோடு இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் போட்டு தி.மு.க., அடைத்து வைத்து, அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் கூட ந டத்த முடியாத அளவுக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே, தமிழகத்தில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டும். தோல்வி பயத்தில் தி.மு. க., திருட்டு வேலை பார்க்கிறது. இவ்வாறு தம்பிதுரை பேசியதை அடுத்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., - அ.தி.மு.க., என இரு தரப்பையும், ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அமைதிப்படுத்தினார். தொடர்ந்து, தமி ழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தம்பிதுரை வைத்தபோது, ''தவறான கருத்துகளையோ அல்லது மாநில விவகாரங்களையோ இங்கு பேச வேண்டாம்,'' என ராஜ்யசபா தலைவர் கேட்டு கொண்டார். அப்போதும் தம்பிதுரை, தி.மு.க., - எம்.பி., சிவா இடையே காரசார விவாதம் தொடர்ந்ததால், ராஜ்யசபாவில் அமளி நீடித்தது.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

mindum vasantham
டிச 16, 2025 11:42

பிஜேபி அதிமுக கூட்டணி வலுவாக அமைத்தால் திமுக வீட்டுக்கு செல்வது உறுதி


mindum vasantham
டிச 16, 2025 11:41

இவரை நான் ஏர்போர்ட் ல் பார்த்துள்ளேன் பெரிய பந்தா செய்ய மாட்டார்


N S
டிச 16, 2025 11:24

மோஸ்ட் டேஞ்சரஸ் துணை முதல்வர் நடத்தும் கூட்டம் என்பதால் அரசே நடுங்கிக் கொண்டிருக்கிறது. காவல் துறை காவல் காரன்" போல நடந்துகொண்டது.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 16, 2025 11:22

2026 ல் திமுக ஆட்சிக்கு வர பாஜக அனைத்து உதவிகளையும் செய்யும். அதற்கு முன்பாகவே அதிமுகவை காணாமல் போகச் சேyyum


Madras Madra
டிச 16, 2025 10:35

நாங்க திராவிடனுங்க எந்த சட்ட திட்ட அற நெறி களுக்கும் கட்டு படாதவர்க ள்


S.V.Srinivasan
டிச 16, 2025 10:25

அதுதாங்க திராவிட மாடலின் ஜனநாயக பண்பாடு. அவங்க கட்சி கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி தேவை இல்லை. மற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு 1008 சட்டம், சடங்கு. 2026இல் பாடம் கர்ப்பிக்க வேண்டும்.


Barakat Ali
டிச 16, 2025 09:58

திமுக கொண்டுவரும் நியதிகள், நிபந்தனைகள் மத்தவங்களுக்குத்தான் பொருந்தும் ...... திமுகாவுக்குப் பொருந்தா ........


முருகன்
டிச 16, 2025 09:03

இவரின் ஊர் மக்கள் இறந்த போது இல்லாத வேகம் கோபம் கூட்டம் நடத்தியதற்கு வருகிறது பாருங்க


avilaa ravi
டிச 16, 2025 09:33

யார் காரணம்?


Haja Kuthubdeen
டிச 16, 2025 09:53

விடுங்க சார்...காலி சேர்களை வைத்து கூட்டம் நடத்தியதற்காக தம்பிதுரை இவ்வளவு தூரம் கோபம் படக்கூடாதுதான்.


kjpkh
டிச 16, 2025 11:39

கூட்டம் எப்படி நடந்தது 84 கண்டிஷன்கள் போட்டா நடந்தது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வழக்கமே திமுக முட்டுக்களுக்கு கிடையாது.


vbs manian
டிச 16, 2025 08:58

பலர் மனதில் இந்த சந்தேகம் உள்ளது. விஜய் அனுமதி கேட்டால் microscope வைத்து அவரை அலசி இல்லாத முடியாத விதிமுறைகளை விதிக்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலை கூட்டம் பற்றி மூச்சை காணோம். இந்த ஒரேவஞ்சனை ஏன் எதற்கு யாருக்காக. எதிர் கட்சிகள் கூட்டம் போட்டால் ஏன் இந்த பதற்றம் போலீஸ் அதீத தீவிரம் .வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.


varatharajan
டிச 16, 2025 08:22

தம்பி துரை சார் கோமாவில் இருந்து வந்துட்டீங்க போல எப்படி இருந்தாலும் நீங்க பாஜகவுக்கு ஜால்ரா அடிச்சு தான் தீரணும் பார்லிமென்டல் நாலு கேள்வி கேட்க தான் உங்களுக்கு வாங்குன காசுக்கு ஏதாவது வேலை செய்யணும்ல கேளுங்க இந்த திருவண்ணாமலைல யாருமே சாகலியே நல்லா வந்து நல்லா தான் போனாங்க யார் வெறிகொண்டு செயல்படலையே யார் யாரோட கையை கடிக்கலையே எதையெல்லாம் பார்லிமெண்ட்ல பேசணுமோ அதை எல்லாம் பேசாம தேவையில்லாத பேசிட்டு இருக்கீங்களா நீங்க பேசறது எல்லாமே தேவையில்லாதது தான் நீங்க கொடுக்குறது எல்லாமே அது மாதிரிதான்


kjpkh
டிச 16, 2025 09:36

இப்படி சப்பக்கட்டு முட்டுக்களை கொடுத்தே திமுக மேல் மக்களுக்கு கோபத்தை வரவைத்து விடுவீர்கள். பாராளுமன்றத்தில் திமுக 39 எம்பிக்கள் வெளிநடப்பு தவிர என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல.


Madras Madra
டிச 16, 2025 10:36

ஆக கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்ல மாட்டோம் ஏன்னா நாங்க சொல்றதுதான் சட்டம்


Arjun
டிச 16, 2025 10:51

எப்பொழுதும் கொத்தடிமை கூட்டத்திற்கு ஒரு குணம் உண்டு அது என்னவென்றால் இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் அதை மக்கள், எதிர்க்கட்சியில் உள்ள எந்த கட்சி கேள்வி கேட்டாலும் பதில் வராது ,ஆனால் அவர்கள் கேள்வி கேட்ட தலைவரை அவதூறாக,கேவலமாக பேசுவார்கள்.


சமீபத்திய செய்தி