உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வேதனை எப்படி புரியும்? அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வேதனை எப்படி புரியும்? அண்ணாமலை

சென்னை: ‛‛ ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்? '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. திமுக - காங்கிரஸ் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xvzocyff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்? ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் . இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Mario
ஜூன் 16, 2024 09:36

மோடிக்கும் அது புரியல பாவம்


Indian
ஜூன் 15, 2024 13:48

பஞ்சாபி விவசாயி போராடும் போது , அவங்க வேதனை பி ஜெ பி கு புரிந்ததா ?? ..அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க ..எத்தனை பஞ்சாபி விவசாயி இறந்தனர், கணக்கு உண்டா . இரக்கம் உண்டா


Bala
ஜூன் 15, 2024 14:13

என்ன வடக்கன்ஸ் மேல குடும்ப கொத்தடிமைகளுக்கு திடீர் கரிசனம்? முதலில் அவர்கள் விவசாயிகளே கிடையாது. இடைத்தரகர்கள்


Barakat Ali
ஜூன் 14, 2024 13:18

அவரு கவனிக்கிறது அயலக அணியின் நன்மையை மட்டுமே .......


Ramesh Sargam
ஜூன் 13, 2024 21:09

அவருக்கு கஞ்சா வியாபாரிகள் வேதனை மிக மிக நன்றாக புரிகிறது.


சுபாஷ்
ஜூன் 13, 2024 19:17

வேதனையோ... சோதனையோ... நாப்பதுக்கு நாப்பது ஜெயிச்சு சாதனை. நீங்களும் கஜகர்ணம் போட்டீங்க. ஒண்ணும் நடக்கலியே..


Senthoora
ஜூன் 13, 2024 18:23

உங்க தலைவருக்கு முதலில் விவசாயிகள் போராட்டத்தை பற்றி சொல்லி, அதை தீர்த்துவைக்க சொல்லிக்கொடுங்க. அப்புறம் பார்க்கலாம்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 13, 2024 17:57

நடுவுல இரண்டு மாசம் இருந்தது... 40 சீட்ட அள்ளி கொடுத்திருப்பாங்க... இதுக்கு அப்படி


Svs Yaadum oore
ஜூன் 13, 2024 17:42

இன்னும் ரெண்டும் கண்ணும் இருந்தால் எப்படி .... திமிர் என்றால் அடுத்தவருக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2024 17:39

நாற்பதுக்கு நாற்பது இலவச பேருந்து மற்றும் 1000க்கு ஆசை பட்டு ஓடி ஓடி வாக்களித்து திராவிட மாடலில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று மாண்புமிகு முதல்வர் கூறியது உண்மை என்று நிருபித்து இப்போது விவசாயிகள் என்ன செய்யவது.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 16:59

இங்கு பெய்வதில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் தன்னிறைவடைந்து காய்கறி பழங்களை ஏற்றுமதி செய்கிறது. இங்கு விவசாயம் சரியில்லாததற்கு விவசாயிகளின் தவறே காரணம்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 13, 2024 17:43

நீ பிறந்த காரணத்தால் அதை போற்ற வேண்டுமே தவிர.... நீ இப்ப அமெரிக்கா போய்ட்டு... அங்கே இருக்குற மார்பல் தரையை, நீ பிறந்த தரையுடன் ஒப்பீடு செய்வது “இழிபிறவி”கள் மட்டுமே...? எப்பப் பார்த்தாலும், தான் பிறந்த மண்ணையும், தன் மாநிலமான தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தி பேசுவதே உனக்கு பொழப்பா போச்சு... எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருக்கு...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை