உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய பள்ளிக் கட்டிடங்கள் எத்தனை கட்டியிருக்கிறீர்கள்: திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

புதிய பள்ளிக் கட்டிடங்கள் எத்தனை கட்டியிருக்கிறீர்கள்: திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இதுவரை புதிய பள்ளிக் கட்டிடங்கள், எந்தெந்த மாவட்டம் மற்றும் ஊர்களில் கட்டியிருக்கிறீர்கள் என்று திமுகவுக்கு, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q0u7ysro&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை மொத்தமாகப் பறந்து, அருகிலுள்ள வீட்டில் விழுந்து அந்த வீட்டின் கூரையையும் சேதப்படுத்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பகல் நேரத்தில், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இது போன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. https://x.com/annamalai_k/status/1949095480476193141ஆட்சிக்கு வந்தவுடன், 10,000 புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம். அமைச்சர்கள் இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டினோம் என்று ஆளுக்கொரு கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மலைப் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை கூட, இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் சரி செய்யப்படவில்லை என்பதுதான் திமுக ஆட்சியின் உண்மையான அவல நிலை.பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் ஏற்கனவே பலமுறை கேட்டதையே மீண்டும் கேட்கிறோம். எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஊர்களில், இதுவரை புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருக்கிறீர்கள்? நான்கு ஆண்டுகளாக திமுக அரசு வெற்று விளம்பரங்களுக்குச் செய்யும் செலவை, இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று, முழு விவரங்களோடு விளம்பரம் செய்யலாமே? யார் உங்களைத் தடுக்கிறார்கள்?இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pmsamy
ஜூலை 27, 2025 10:02

நீ போய் ஒவ்வொரு பள்ளிக்கூடமா கணக்கு எடு வேற என்ன வேலை உனக்கு


Thravisham
ஜூலை 27, 2025 15:05

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதிலென்ன?


Nava
ஜூலை 27, 2025 21:55

கணக்கு எடுத்து சொல்ல வேண்டியது விடியா அரசு அண்ணமலையல்ல


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 27, 2025 05:50

பள்ளி கட்டங்கள் விட அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் மது பான கூடங்கள் திறக்கப்பட்டது வித விதமாக டாஸ்மாக் மதுவை எப்படி என்று தான் கவனம் செலுத்தியதால் தான் தமிழ் இங்கே தரிகிடத்தான் தாளம் போட்டு திராவிட மாடலுக்கு முட்டு கொடுத்து கொண்டு உள்ளது.


kumar
ஜூலை 27, 2025 01:56

நீங்கள் திராவிட மாடல் பள்ளிக்கு சென்று கற்றது உங்கள் கருத்தை பார்த்தாலே தெரிகிறது . முதலில் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பிழையில்லாமல் எழுத முயற்சிக்கவும் . வாழ்த்துக்கள் . அடுத்து , அண்ணாமலை அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசின் அவல ஆட்சியையும் , திமுக, கூட்டணி கட்சிகளின் மக்கள் விரோத போக்கையும் இந்த மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டு இருக்கிறார் . ஆனால் 200 ரூபாய்க்கும் , க்வார்ட்டருக்கும் , பிரியாணிக்கும் ஆசைப்பட்டு கருணாநிதி குடும்பத்துக்கு அடிமையாகத்தான் இருப்பேன்" என்றால் அது யார் தவறு ? இனியாவது விழிப்பு வருமா உங்களுக்கும் மற்ற அடிமைகளுக்கும் ?


Mani Auto
ஜூலை 26, 2025 23:07

நிங்கள்இவ்வளவுநாள்உறங்கிகொண்டுஇறுந்திர்களா.நன்குபடித்தவரே


rama adhavan
ஜூலை 26, 2025 23:53

உங்களுக்கு இல்லாத அக்கறை பிறருக்கு எதற்கு? அடுத்தவரா அரசுக்காக வேலை பார்ப்பார்கள்? நல்ல கூத்தாக உள்ளதே?


vivek
ஜூலை 27, 2025 05:41

என்ன செய்வது....மீட்டருக்கு மேல் சுடு வைத்தால் தான் உன்னை போல auto களுக்கு புரியுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை