உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பாடத்தில் எத்தனை பேர் தோல்வி? உதயநிதியிடம் பதிலின்றி தவித்த அதிகாரிகள்..

தமிழ் பாடத்தில் எத்தனை பேர் தோல்வி? உதயநிதியிடம் பதிலின்றி தவித்த அதிகாரிகள்..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அனைத்து துறை அலுவவர்களுடன், அரசு திட்டப்பணிகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம், நேற்று துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்தது. ஆய்வு கூட்டம் துவங்கியதுமே, “ஆரணி, வந்தவாசி பகுதியில்தான், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கான காரணம் என்ன?'' என, துணை முதல்வர் கேள்வி எழுப்பினார். பதில் அளித்த அதிகாரிகள், 'சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரமற்ற முறையில் கல்வி கற்பிக்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு சென்ற பின்பும், ஆசிரியர்கள் சரிவர கல்வி கற்பிப்பதில்லை. இதனால் தான், மாணவர்கள் கல்வித் தரம் பாதித்துள்ளது இப்படிப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும் பணி நடக்கிறது' என்றனர். அடுத்து, 'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தமிழ் பாடத்தில் மட்டும் எத்தனை பேர், கடந்த ஆண்டு தோல்வியுற்றுள்ளனர்' என, துணை முதல்வர் கேள்வி எழுப்பியதும், கல்வித்துறை அதிகாரிகளிடம், எந்த புள்ளி விபரமும் இல்லை. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குறுக்கிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், 'அரை மணி நேரத்தில் புள்ளி விபரங்கள் தருகிறோம்' எனக்கூறி, துணை முதல்வரிடம் சமாளித்தார்.தொடர்ந்து அதிகாரிகளிடம் உதயநிதி பேசியதாவது:பழுதடைந்த மின்கம்பம் மாற்றுவதற்கு கூட, பொதுமக்கள் அலையாய் அலைய வேண்டிய நிலை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளனர். பட்டா கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், முறையாக பட்டா வழங்க நடவடிக்கை இல்லை. பட்டா கேட்டு விண்ணப்பிப்போருக்கு, அவர்கள் கேட்கும் இடத்தில் வழங்க முடியவில்லை என்றால், மாற்று இடம் கண்டறிந்து வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். கோவிலை மையமாக வைத்து பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். பின், புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த உதயநிதி அளித்த பேட்டி: ''ஆய்வு கூட்டத்தில், மெத்தனமாக செய்யப்படும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் தீட்சிதர்கள் மட்டுமல்ல, யாருமே தங்களை கடவுளாக நினைத்துக் கொள்ளக்கூடாது. ஹிந்தி மாத கொண்டாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஹிந்தி பேசுபவர்கள் எங்கு அதிகம் வசிக்கின்றனரோ, அங்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Natarajan Ramanathan
அக் 21, 2024 00:08

பாலடாயிலோட அப்பனே தமிழில் பெயில் என்பது தெரியுமா?


D.Ambujavalli
அக் 20, 2024 19:03

M . L . A ., அமைச்சர்கள் கிடக்கட்டும், இவருக்கும், கல்வி அமைச்சருக்கும் ஐந்தாம் வகுப்பு தமிழ்ப்படத்தில் ஒரு கேள்வி கேட்டால் பதில் அளிக்கத் தெரியுமா? முதலில், எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியுமா? பார்க்க வேண்டும்


எஸ் எஸ்
அக் 20, 2024 13:53

2026 ஆம் ஆண்டிலாவது விடிவு காலம் பிறக்குமா? பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் வாக்காளர்களும் தேர்தல் அன்று சுற்றுலா செல்லும் வாக்காளர்களும் சிந்திக்க வேண்டும்


Sivagiri
அக் 20, 2024 13:17

அடேங்கப்பா - மாணவர்கள் பெயில் ஆனால், ஆசிரியர்கள் தரமற்று இருப்பதுதான் காரணமாம்... முன்னெல்லாம் தமிழ் ஆசிரியர் என்றால் மூணு அடி நீள பிரம்பு வச்சிருப்பார்.. மாணவர்கள் இடுப்புக்கு கீழே தழும்புகள்தான் படிப்புக்கு அடையாளம், அப்ப அதுதான் தரம்... இப்போ, மாணவர்கள் கத்தி, அறிவாளோடு, கஞ்சா, பீர், செல்போன் - சகிதமாக வகுப்புக்கு வருகிறார்கள், ஆசிரியர், பாவம், இடுப்புக்கு கீழே கால் ரெண்டும், கிடுகிடு-ன்னு ஆடுது . . . இவை எல்லாம் திருட்டு மாடலின் சாதனைகள் . . .


Ramesh Sargam
அக் 20, 2024 12:41

திருவண்ணாமலை இன்று அதிகம் மக்கள் வரும் இடமாக உள்ளது. காரணம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகம் மக்கள் இன்று திருவண்ணாமலை வருகிறார்கள். தினம் தினம் அங்கு திருவிழாதான். மக்கள் அதிகம் என்றாலே, குப்பை கூளங்கள் அதிகம்தான். துப்புரவு தொழிலாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு திருவண்ணாமலையை சுத்தமாக வைக்க துணை முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிடவேண்டும்.


sridhar
அக் 20, 2024 11:53

மொத்த மாணவர்களில் வெற்றி பெற்றவர்கள் போக மீதி மாணவர்கள் தோல்வி ஐயா .


SIVA
அக் 20, 2024 11:51

என்ன விவரம் இல்லாமல் பேசுறாங்க பிள்ளைங்க தமிழ் பாஸ் ஆகிறதா முக்கியம் கவர்னர் கலந்து கொள்ளும் விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடுவது தானே முக்கியம், அறுபது ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழ் வழி கல்வி படிப்பவர்கள் சதவிகிதம் பாதிக்கும் மேல் குறைந்து உள்ளது, இவர்கள் இரு நூறு ரூபாய் கொத்தடிமை கூட்டம் கூட தமிழ் வழி கல்வியில் படிப்பது இல்லை ...


சகுரா
அக் 20, 2024 11:12

கொண்டாடுவதில் என்ன தவறு? எதற்கு இந்த அடக்குமுறை?


Narayanan Sa
அக் 20, 2024 11:05

முன்னாள் முதல்வர் காலத்தில் இருந்து தமிழுக்கு உயிர் கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். ஆனால் யாரும் உயிர் கொடுத்தது இல்லை. அதன் பிறகு இருப்பது ஒரு உயிர் அதை எத்தனை முறை யார் கொடுத்தார்கள். இவர்கள் திமுக தான் இப்படி சொல்லி மக்களை மெஸ்மெருஷம் பண்ணி வைத்து இருக்கிறார்கள். முதலில் பள்ளிகள் சரியான கட்டமைப்பு தகுந்த ஆசிரியர் உபகாரணங்கள் என்று எதுவுமே எந்த பள்ளியிலும் கிடையாது. பின் எப்படி மாணவர்கள் தேர்ச்சிச் பெறுவார். மற்ற மாநிலங்களில் மாணவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். இங்கோ அரசு பள்ளியில் படித்த ஒரிவர் அவர் திறமையினால் முன்னுக்கு வந்தவர். ஏன் இப்படி எல்லாம் தமிழ் நாட்டில் நடக்கிறது. கல்விக்கு என்று அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதி முழுவதும் அந்த வேலைக்கு செலவிட படுவது இல்லை. அதில் பாதிக்கும் மேல் கமிஷன் என்ற நிலையில் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள். இது கடந்த ஐம்பது வருடங்களாக நடப்பத்தால் இது தொடர்கதை ஆக நடக்கிறது. இதை எப்படி மாற்றுவது. இந்த திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் நிலை என்றும் மாறாது. ஜெயஹிந்த்


vbs manian
அக் 20, 2024 10:59

ஈஷா சிதம்பரம் வடலூர் சம்பவங்கள் ஹிந்துக்களுக்கு விடப்பட்ட சவால். நீதிமன்றம் நடுநிலைமை தேவை. தீக்ஷிதர்கள் நல்ல வக்கீல் வைத்து உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். உள்ளூரில் எந்த நியாமும் கிடைக்காது.