உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்

கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் தொடர்பாக 300 வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. துடியலூர் அடுத்த வெள்ளகிணறு என்ற இடத்தில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசாரை குற்றவாளிகள் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கினர். பின்னர் போலீசார் அவர்களை சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 3 பேர் மீது 4,5 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 பேர் மீதும் கொலை, திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சதீஷ் மற்றும் கார்த்தி சகோதரர்கள், குணா உறவினர் ஆவார். 300 சிசிடிவி வீடியோ பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். சதீஷ், குணா ஆகியோருக்கு இரண்டு காலிலும் குண்டு பாய்ந்துள்ளது. கார்த்தி என்பவருக்கும் ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது. 'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் செல்போனை அவசர நேரத்தில் மூன்று முறை ஆட்டினால், போலீசார் உதவிக்கு வருவார்கள். புகார் வந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 11.20க்கு 100க்கு உதவி கேட்டு அழைப்பு வந்தது. 11.35க்கு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்தது போல் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sun
நவ 04, 2025 23:17

11.20 க்கு அழைப்பு வந்து 11.35 க்கு காவல் துறையினர் குற்றம் நடந்த அந்த இடத்திற்கு போய் விட்டனர். ஆனால் மிகவும் இருட்டாக இருந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லாக் கொடூரமும் நடந்து முடிந்த பின்பு அந்தப் பெண் காலை 5.00 மணிக்கு அலங்கோலமாக வெளியே வந்த பிறகு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குற்றவாளிகள் என்ன கையில் லைட்டை வைத்துக் கொண்டா குற்றச் செயல் புரிந்துள்ளனர். இருட்டாக இருந்த சம்பவ இடத்தில் இரவு 11.35 மணிக்கு சென்ற காவலர்களிடம் கையில் டார்ச் லைட் கூடவா இல்லை? காவலர்கள் சென்ற இடத்திலேயே காவலர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இந்த மிகப் பெரிய குற்றம் நடை பெற்றுள்ளது. அப்ப காவலர்களை விட குற்றவாளிகள் திறமைசாலிகள். ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றும் கூட அவர்களால் கண்டுபிடிக்கப் படாமல் ,தடுக்கப் படாமல் இவ்வளவு பெரிய குற்றம் விடியும் வரை நடந்துள்ளது. இச்சம்பவம் போல தமிழக காவல் துறைக்கு வேறு அசிங்கம் வேறு எந்த சம்பவமுமே இல்லை.


நிக்கோல்தாம்சன்
நவ 04, 2025 18:56

சென்னையில் அந்த பெண்கள் அப்படி கதறினார்கள் , திமுக கொடி காரில் விரட்டிய மக்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது ?


Priyan Vadanad
நவ 04, 2025 17:32

சுட்டுப்பிடிக்கவேண்டாம். ஆனால் இரவு நேரத்தில் கள்ளத்தனமாக சுற்றி திரிபவர்களையும், ஒதுக்குப்புறம் தேடி அலைபவர்களையும் பிடித்து பாதுகாப்பாக காவல் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் அவர்களை பத்திரமாக போலீஸ் பாதுகாப்பில் அவரவர் இருக்குமிடம் கொண்டு சேர்த்துவிட்டால் நல்லது.


என்றும் இந்தியன்
நவ 04, 2025 17:20

தயவு செய்து அவர்களை விட்டு விடுங்கள் அறுத்துவிட்டு???அவர்களுக்கு ஜெயிலில் இலவசமாக அடைக்கலம் கொடுத்தால் அது தங்க திங்க தூங்க அரசு செலவழிக்கவேண்டும். அது அனாவசியம், தேவையில்லை அது.


Indian
நவ 04, 2025 15:55

அது எப்படி சுடலாம் என கேட்க , மனித உரிமை ஆணை என்று சொல்லி கொஞ்சம் பேர் வருவான் ??.


Indian
நவ 04, 2025 15:53

அப்படியே கால் மற்றும் கையை வெட்டி விடுங்க ....


M S RAGHUNATHAN
நவ 04, 2025 16:42

அப்படியே விவேக் ட்ரீட்மென்டும் செய்து விட்டால் நல்லது


Haja Kuthubdeen
நவ 04, 2025 14:53

இவனுங்க ஆயுளுக்கும் நடந்து போக முடியாத படி காவல்துறை கவணிப்பு இருக்கனும்.கோர்டில் வழக்கு பாட்டுக்கு நடக்கட்டும்.ஸ்டேசனிலிலோ ஜெயிலிலோ இவனுங்கள வச்சு செய்யுங்க ஆபீஸர்ஸ்..


SUBBU,MADURAI
நவ 04, 2025 14:50

இதெற்கெல்லாம் மூல காரணம் மதுரை போலீஸ்தான் அவர்கள்தான் 15 வழக்குகளுக்கு மேல் உள்ள ரவுடிகளை மாதம் முழுவதும் ஓயாமல் கோர்ட்டு கேஸ் சிறை என்று கூட்டிக் கொண்டு அலைவதால் கோபமடைந்து அந்கக் கைதிக்கு டோக்கன் போட்டு விடுவார்கள் டோக்கன் என்றால் என்னவென்று கேட்பவர்கள் மதுரை தெப்பக்குளத்திற்கு வந்து அங்கு உலவிக் கொண்டிருக்கும் ஆவிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்!


duruvasar
நவ 04, 2025 14:31

கட்டி பிடித்ததால் சுட்டு பிடிதோம் . ஆஹா அருமையான விளக்கம்


அப்பாவி
நவ 04, 2025 14:15

இன்னும் கொஞ்சம் மேலே இடுப்புக்கு கீழே சுட்டு பிடிச்சிருக்கலாம்.


சமீபத்திய செய்தி