உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது: உயர் நீதிமன்றம் கருத்து

கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது: உயர் நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. அது குற்றமாகாது' என, உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.துாத்துக்குடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசார் 2022ல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதாடியதாவது:மனுதாரரும், 19 வயது இளம் பெண்ணும் காதலித்து உள்ளனர். ஒரு நாள் இரவில் தனியாக சந்தித்தபோது மனுதாரர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தன் பெற்றோரிடம் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். பின், மனுதாரரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். அதற்கு மனுதாரர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகாரில் இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இவ்வாறு அவர் வாதிட்டார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உடல் ரீதியான உறவை ஏற்படுத்தும் நோக்கத்தில் விரும்பத்தகாத பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீதுதான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. இது எப்படி, மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் குற்றமாகும்?அவ்வகையில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்தபோதும், அவர் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அது, சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக அமையும். இவ்வழக்கின் இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.ஆனாலும் போலீசார், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஉள்ளனர். இதையும், மனுதாரர் மீதான வழக்கையும் இந்த நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்கிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

R.Varadarajan
நவ 16, 2024 16:54

நீதித்துறை சட்டங்களை சீர்தூக்கிப்பார்ப்பது டன் இப்போது மக்களுக்கு வாழ்க்கை முறைகளையும், ஒழுக்க , நீதி போதனைகள் , தனி மனித விமர்சனங்களிலும் ஈடுபடுத்திக்கொள்ளும் அளவிற்கு தன் அதிகார எல்லையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளதாக தெரிகிரது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 16, 2024 15:13

இனி வரப்போகும் காலங்களில் கூட தீர்ப்பு வரலாம் அதாவது பருவ வயதில் காதல் வயப்பட்ட இருவர் காதல் மயக்கத்தில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆணும் நானும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண்ணும் உறுதியளித்த பின்னர் பெண் சம்மதத்தோடு ஆணும் ஆணின் சம்மதத்தோடு பெண்ணும் பாலியல் உறவு கொண்ட பின்னர் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஆணும் திருமணம் செய்ய மாட்டேன் என்று பெண்ணும் கூறினால் அது குற்றமாகது. இச்செய்கையினால் பெண் கர்ப்பம் ஆனால் மட்டுமே பாலியல் வன்கொடுமை குற்றமாகும். இது போன்று தீர்ப்பு வரும் காலத்தில் வந்தாலும் வரலாம். கலி காலம். செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது என்று வங்கி மேலாளர் தரும் ஆவணம் இருந்தாலும் செக் ரிட்டர்ன் செய்தவர் கோர்ட்டில் ஆஜர் ஆகா விட்டாலும் கண்டு கொள்ளா நீதி மன்றம் நமது நீதி மன்றம். அவர்களிடம் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும். கைகாளால் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று ஒரு பெண் நீதிபதியே தீர்ப்பளித்த பெருமை வாய்ந்த நீதிமன்றம் நமது நீதி மன்றங்கள். வாழ்க பாரதம்.


காஷ்மீர் கவுல் பிராமணன்.
நவ 16, 2024 13:18

உச்சநீதிமன்றம் கள்ள உறவு குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய பிறகு மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சரிதானே.


S. Neelakanta Pillai
நவ 16, 2024 11:16

நேர்மையாகவும் துணிச்சலாகவும் தீர்ப்பு வழங்கிய ஒரு நீதிபதியை குண்டாஸ் ஆட்சி எப்படி மாற்றிவிட்டது என்பதற்கு இந்த வழக்கின் தீர்ப்பு முக்கிய சாட்சி. ஒரு பெண் ஒரு ஆணை விரும்பியதன் பேரிலும் அவன் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தன்னை ஒப்படைக்கிறாள். அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிப்பவனை தண்டிக்க அந்தப் பெண்ணுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. இது ஏதோ கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தது போல் அல்ல. நீதிமன்றம் வைத்தியத்திற்கும் நம்பிக்கை துரோகத்திற்கும் வித்தியாசம் பார்க்க தவறிவிட்டது. துரதிருஷ்டம்.


Nandakumar Naidu.
நவ 16, 2024 10:57

இளைய சமூகம் முதலிலேயே சீர் கேட்டு கிடக்கிறது, இதில் இது போன்ற தீர்ப்பு பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்யும். உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பை நீக்க வேண்டும்.


Ram pollachi
நவ 16, 2024 10:42

வாதி, பிரதிவாதி, மற்றும் நீதிபதிகள் பேசி வழக்குகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் இடையில் வக்கீல்கள் வந்தால் பல கசமுசா நடக்கும். எல்லா துறையில் இருக்கும் இடைத்தரகர்களை ஒழித்தது போல் இந்த கெளரவ தரகர்கள் அழித்தால் நீதி அனைவருக்கும் கிடைக்கும்.... எதன் அடிப்படையில் பொள்ளாச்சி மாணவிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது?


Parthasarathy Badrinarayanan
நவ 16, 2024 10:26

அறிக்கை தாக்கல் செய்யவேண்டாம் என்ற உத்தரவு ஆங்கிலத்தில் இருந்திருக்கலாம். புரியும் அறிவு போதாதிருக்கலாமோ.


RAVINDRAN.G
நவ 16, 2024 10:26

கலாச்சார சீர்கேடுகளுக்கு நீதிமன்றமே துணைபோனால் நாடு அழியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 08:44

மனைவியாகவே இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...... முதலில் இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா ???? இப்படியும் புரட்சிகர தீர்ப்புக்கள் வருகின்றன ..... அதே சமயம் முக்கியத்துவம் உள்ள பொது நல வழக்கை யாராவது தொடர்ந்தால் அவற்றுக்கு உள்நோக்கம் கற்பித்து நீதிபதிகள் அபராதம் விதிக்கிறார்கள் .....


Indian
நவ 16, 2024 08:36

விளங்கும்......................... இனி ரோட்டுல போற ஒவ்வொருவனும் , வர போற பொண்ணுகளை கட்டி புடிச்சி முத்தம் கொடுப்பானே ...ரோட்டுல பொண்ணுகள் நடமாட முடியாதே .


முக்கிய வீடியோ