உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் அரசியல் சூப்பர் ஸ்டார்: சீமான்

நான் அரசியல் சூப்பர் ஸ்டார்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார், '' என மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.மதுராந்தகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: கங்கை கொண்டோம். கடாரம் கொண்டோம். சரிதான். ஆனால், காவிரியில் கொஞ்சம் தண்ணீர் கொள்ள முடியவில்லை. இது பெரும் அவலம். பாண்டியர், சோழர், சேரர் மூவேந்தர் ஒன்று சேர்ந்து போரிட்டு இருந்தால், உலகம் தமிழனின் உலகம். ஒருவரும் எதிர்நின்றிருக்க முடியாது. மன்னராட்சி காலத்தில் என்ன நடந்ததோ, மக்களாட்சி காலத்தில் அது தான் நடக்கிறது. காந்தியை, நேதாஜியை மறந்து விட்டார்கள்.தமிழ் மக்கள் விழித்து கொள்ளவில்லை என்றால், இந்த இனத்தை பாதுகாக்க இனி எவனும் வர மாட்டான். நம்மை சுற்றி எவ்வளவு வேலை நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும். அதில் நமது லட்சியத்தை மரமாக்க வேண்டும். தலைவன் இல்லாத நாடாக இது தட்டுக்கெட்டு நிற்கிறது.ரஜினியும், நானும் இரண்டரை மணி நேரம் பேசினோம். என்ன பேசினோம் என்பதை பற்றி நானும், அவரும் சொல்ல தேவையில்லை. அவரை சந்தித்ததால் நான் சங்கி ஆகிவிடுவேனா? உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கூப்பிட்டு பக்கத்தில் வைத்து கொள்கிறீர்கள். நான் சந்தித்து பேசியதும் கதறுகிறீர்கள். ஏனென்றால், ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். நான் இல்லை என்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம், எட்டு வழிச்சாலை வந்து இருக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

theruvasagan
நவ 28, 2024 17:53

சந்தானம் சினிமா காமெடியன் என்றால் நானும் அரசியலில் காமெடி பண்ணுகிறவன்தான். ஹி..ஹி..ஹி. இது எப்படி இருக்கு.


ராமகிருஷ்ணன்
நவ 28, 2024 14:27

சீமாண் தமிழக அரசியலில் பவர்ஸ்டார் வேற எதுவுமே கிடையாது.


kulandai kannan
நவ 28, 2024 11:59

ஒருவேளை சீமான் கட்டு மரத்தின் மகனாகப் பிறந்திருந்தால், இன்று அவர் CM.


Varuvel Devadas
நவ 28, 2024 11:55

It seems, this fellow is the real comedian or mentally retarded. Most of the time, he speaks rubbish and stupidity. In my view, the media should ignore this fellow .


ஆரூர் ரங்
நவ 28, 2024 11:07

ரஜினி கூப்பிட்டது தனது அடுத்த படத்துக்கு காமெடி வசனங்களைத் தயாரிக்க. இவ்வளவு சீரியசா வேற யாராவது காமெடியா பேசமுடியுமா?


Haja Kuthubdeen
நவ 28, 2024 10:19

வெத்து வேட்டு...


orange தமிழன்
நவ 28, 2024 09:43

ரஜினிக்கு இது தேவையா... இவரை எதற்கு சந்திக்கணும்....


Nallavan
நவ 28, 2024 07:43

தமிழ் நாட்டில் நீ ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ, ஒரு கௌன்சிலர், ஒரு வார்டு மெம்பெர் , ஆகி காட்டு அப்பறோம் சொல்றோம், அரசியல் சூப்பர் ஸ்டார் ,சுப்ரிம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என்று


Mani . V
நவ 28, 2024 05:42

அப்புடியா? சொல்லவே இல்லை. கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு என்னத்தை உருட்டினாலும் ஆமை ஓடு படகு, முதலைக் கறி இட்லி, செல்லடிக்கிறாங்க... கைதட்டும் ஒரு கூட்டம் இருக்கும் வரையிலும் நீதான் ராசா சூப்பராரோ சூப்பர் ஸ்டார்.


சம்பா
நவ 28, 2024 03:02

அத நீ சொல்லக்கூடாது மற்றவர்க சொல்லனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை