உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை; அறப்போர் இயக்கத்தின் புகார் தவறு: சொல்கிறார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்

நான் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை; அறப்போர் இயக்கத்தின் புகார் தவறு: சொல்கிறார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்

ராமநாதபுரம்: 'நான் ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் நிலம் அரசுக்கு சொந்தமானதே கிடையாது. என் மீதான அறப்போர் இயக்கத்தின் புகார் தவறானது' என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=epjnn4kf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ராமநாதபுரம் தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், இன்று (அக்.,25) அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: 45 வருடமாக இந்த கேஸ் நடக்கிறது. கோர்ட்டில் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அப்பீல் போட்டு, சுப்ரீம் கோர்ட் வரை தீர்ப்பு வாங்கிட்டு வந்து இருக்கிறேன். நான் ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் நிலம் அரசுக்கு சொந்தமானதே கிடையாது. என் மீதான அறப்போர் இயக்கத்தின் புகார் தவறானது.பரங்கிமலையில் உள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கருணாநிதி பேச்சை கேட்ட முதல்வர் ஸ்டாலின் இப்போது இளைஞர்கள் பேச்சை கேட்கிறார் . எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு இல்லை. இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன். 2031ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajarajan
அக் 25, 2024 20:10

சரி, தி.மு.க.வில் உங்களை மாதிரி மூத்தவர்கள் வழிவிடுவது எதற்காக ?? அடுத்து உங்கள் வாரிசுகளுக்கு தானே வாய்ப்பு தருவீர்கள் ?? இது தான் குடும்ப கட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அப்போ தொண்டர் கதி ? வேறு என்ன, அதான் போஸ்டர் ஓட்டும் வேலை, பல்லக்கு தூக்கும் வேலை, வாழ்க ஒழிக கோஷம் போடும் வேலை தானே நிரந்தரம்.


konanki
அக் 25, 2024 19:11

அபகரிக்க வில்லை என்று கூறவில்லை. கவனித்தீர்களா?


Mani . V
அக் 25, 2024 13:51

ஆமா, இப்பவே என்பது வயது. இன்னும் ஆறு வருடம் கொள்ளையடிக்க ஆசையா?


Mani . V
அக் 25, 2024 13:50

நான் ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் நிலம் அரசுக்கு சொந்தமானதே கிடையாது. அது தனியாருக்குச் சொந்தமானது. சரி, ஆனா நீ ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சொல்லவில்லை. அரசுக்கு சொந்தமானது இல்லை என்றுதான் சொல்லியுள்ளாய்


Ramesh Sargam
அக் 25, 2024 12:44

வரலாற்றில் எந்த திருடனாவது நான் திருடினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளானா... ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை