உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

சென்னை: 'சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன். வந்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன்' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை, போயஸ்கார்டனில் நிருபர்களை சீமான் சந்தித்தார். நிருபர்: தமிழகம் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என முதல்வர் பேசியுள்ளார்?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r1rk1kdw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீமான் பதில்: முக்கியமான பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை. எங்களுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. முக்கியமான திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் என் மாநில வரி தர முடியாது என்று சொல்வது அவுட் ஆப் கண்ட்ரோல். உரிமையை பறிகொடுத்து விட்டு புலம்புவது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை. இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டசபை, பார்லிமென்ட் எதற்கு? மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு போன கட்சியிடமே கூட்டணி வைத்துக் கொண்டு மாநில உரிமையை பேசுவது கேலிக் கூத்தானது. நான் தனித்து போட்டியிடுவேன். போட்டிக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறேன். சின்னத்துக்காக காத்து இருக்கிறேன். வந்த உடன் களத்தில் இறங்கிவிடுவேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மதிவதனன்
ஏப் 19, 2025 20:49

திரள் நிதியாரே நீர் பிஜேபி க்கு கூட்டணி என்று சொல்லி பாரு நாளையே உமக்கு சின்னம் ஒதுக்கப்படும்,சிபிஐ IT ED EC எல்லாம் ஜண்டா கையில் , இதற்கு பேர் சாணக்கிய தனம்.


Sundar R
ஏப் 19, 2025 18:41

இஸ்லாமியர்கள் யாரும் சீமானுக்கு ஓட்டு போட மாட்டார்கள். இஸ்லாமியர்கள் செய்வதை மனதில் கொண்டு, அனைத்து ஹிந்துக்களும் சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது. கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடும் முதலியார் மற்றும் செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் ஹிந்து கட்சிகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்லி முதலியார்களையும், செட்டியார்களையும் ஹிந்து மதத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டும்.


Senthoora
ஏப் 19, 2025 18:38

கட்சிக்காக சின்னமா, சின்னத்துக்காக கட்சியா?


முதல் தமிழன்
ஏப் 19, 2025 17:55

அது ஒண்ணுதான் பாக்கி. போயா ...போ ...


Sampath Kumar
ஏப் 19, 2025 17:19

கிடைத்தாலும் ஒன்னும் பண முடியாது போட்டிக்காக காத்து இருக்கிறான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்


Nada Rajan
ஏப் 19, 2025 16:51

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது


ராமகிருஷ்ணன்
ஏப் 19, 2025 16:43

சின்னம் கிடச்சுட்டா எல்லா இடங்களிலும் ஜெயித்து விடுவாயா. உன் வெத்துவேட்டு வாய்ஜாலத்தை வைத்து ரொம்ப நாள் மக்களை ஏமாற்ற முடியாது.


thehindu
ஏப் 19, 2025 16:11

மோடிக்கு காவடி தூக்காமல் கேட்ட சின்னம் கிடைக்காது என்பதால்தான் தூக்கியுள்ளார். தூக்கினாலும் கொடுத்துவிடமாட்டார்கள். கட்சியை உடைக்க இடம் கிடைத்த்தால்தான் கொடுப்பார்கள் .


மீனவ நண்பன்
ஏப் 19, 2025 19:15

விசில் சின்னம் பொருத்தமா இருக்கும் ..அல்லது லட்சுமி வெடி சின்னம் தரலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை