உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகரில் வந்தே பாரத் வீணாக நிற்பதேன்

விருதுநகரில் வந்தே பாரத் வீணாக நிற்பதேன்

மதுரை: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஒருமாதமாக வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி - எழும்பூர் இடையே 650 கி.மீ., துாரத்திற்கு மதுரை வழியாக 2023 செப்., 24 முதல் 'வெள்ளை' நிற வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. செவ்வாய் தவிர்த்து தினமும் காலை 6:05மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (20666) மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில் (20665), இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டதையடுத்து 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயில், ஜன. 15 முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் 8 பெட்டிகள் கொண்ட ரயில் 'ஸ்பேர் ரயிலாக' மாற்றப்பட்டு மே 15 முதல் விருதுநகர் ஸ்டேஷனின் '1ஏ 'பிளாட்பாரத்தில் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இப்படி வீணாக நிறுத்தியிருப்பதற்கு பதிலாக எதாவது ஒரு வழித்தடத்தில், இந்த ரயிலை இயக்கலாமே எனக்கேட்ட போது ரயில்வே தரப்பில் கூறியதாவது: திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால்ஏற்கனவே இயக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட 'ரேக்', ஸ்பேர் ரயிலாக மாற்றப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களில் 'ஆரஞ்சு' நிற வந்தே பாரத் ரயில்கள்இயக்கப்படுகின்றன.எனவே இந்த ஸ்பேர் ரயிலை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் ஏதேனும் ஒன்று பராமரிப்பில் இருந்தாலோ, தேவைப்படும் பட்சத்தில் சிறப்பு ரயிலாகவோ இயக்க முடியும்.விருதுநகரில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேர் ரயில் பெட்டிகள் தினமும் சிறிது துாரம் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மானாமதுரை அல்லது மதுரையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Seyed Omer
ஜூன் 22, 2025 13:23

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் சென்னையிலிருந்து திருசெந்தூருக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே நடைபெறுகிறது ஆன்மீக ஊரான திருசெந்தூருக்கு தூத்துக்குடி வழியாக நேரடியாக ரயில் பாதை எப்போது அமைக்கப்படும்


R K Raman
ஜூன் 21, 2025 23:57

தஞ்சாவூர் புண்ணிய பூமி. ஆனால் ரயில்வேயின் பாரபட்சம் மாறவில்லை. இரட்டைப் பாதை இல்லை. அதனால் பயண நேரம் அதிகம். விவசாய மாவட்டம் என்று அலட்சியமாக இருக்கிறார்களா


KKeyan
ஜூன் 21, 2025 22:46

ஆம். இதிருநெல்வேலியிலிருந்து இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸில் திருச்சி செல்லும்போது விருதுநகரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன்.


S.jayaram
ஜூன் 21, 2025 21:17

ஆம் நான் கூட நேற்று பார்த்தேன் அங்கே நின்று கொண்டிருந்தது. அதுவும் spare வண்டியாக பயன் படுத்தலாம். என்ற விளக்கம் ஏற்புடையதே. ஏனென்றால் இதற்கு மாற்று வண்டி எதுவும் அவசரத்திற்கு கிடைக்காது. ஒன்று செய்திருக்கலாம் 16 பெட்டிகள் சேர்த்ததற்கு பதில், காலையில் நெல்லையில் கிளம்பும் நேரத்தில் ஒரு வண்டி சென்னையில் கிளப்பி இருந்தால் இந்த 16 பெட்டிகள் உள்ள வண்டிகள் தேவை பட்டிருக்காது.


Zahir Hussain M
ஜூன் 21, 2025 15:34

ராமேஸ்வரம் வரைக்கு இயக்கலாம்


A.Gomathinayagam
ஜூன் 21, 2025 14:06

தினசரி மதுரை /திருவனந்தபுரம் இரண்டு ட்ரிப் அடிக்கலாமே வருமான உள்ள வழி தடம்


venugopal s
ஜூன் 21, 2025 13:50

புதிய வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் அல்லது தூத்துக்குடி வரை விடலாமே!


Thravisham
ஜூன் 21, 2025 12:07

அடிச்சதும் எறங்கல,200 ரூவா பாக்கி வந்துடுச்சா


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 11:17

போக்குவரத்து கழகம் கூட நூற்றுக்கணக்கான ஸ்பேர் பஸ்களை வைத்திருக்கிறது.


Shekar
ஜூன் 21, 2025 09:33

ஏதாவது புது ரூட்டில் விட்டால் பஸ் முதலாளிகள் கோபத்திற்கு ஆளாகவேண்டும், நமக்கு ஏன் வம்பு என்று இருக்கிறார்கள். ஏன் அந்த ஊருக்கு உழைப்பவன் மாணிக் தாகூர் கண்ணில் படவில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை