உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4வது முறை ஆட்சியைப் பிடிப்போமா தெரியாது... ஆனால், இது மட்டும் நடக்கும்; நிதின் கட்கரி கிண்டல்

4வது முறை ஆட்சியைப் பிடிப்போமா தெரியாது... ஆனால், இது மட்டும் நடக்கும்; நிதின் கட்கரி கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலேவை கிண்டல் செய்யும் விதமாக, சக அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. 288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஆளும் மஹாயுதி கூட்டணியில் பா.ஜ., முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அதாவலேவின் இந்திய குடியரசு கட்சி இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், நேற்று நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அதாவலே, 10 முதல் 12 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் விருப்பமான தொகுதிகளின் பட்டியலை கூட்டணியிடம் கொடுப்போம் எனக் கூறினார்.இந்த நிலையில், நேற்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், ராம்விலாஸ் அதாவலேவும் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய நிதின் கட்கரி, 4வது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருமா? என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும், ஆனால், ராம்விலாஸ் அதாவலே அமைச்சராவது மட்டும் உறுதி என்று நகைச்சுவையாக பேசினார். அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கலகலவென சிரித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அமைச்சரவையில் ராம்விலாஸ் அதாவலே, தொடர்ந்து 3 முறை இடம்பிடித்திருந்தார். அதற்கு முன் அவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
செப் 23, 2024 20:58

நான்காவது முறையாக அல்ல, ஆயிரம் முறையாக பிஜேபி ஆட்சியில் அமையும். அடுத்தமுறை நிதின் கட்காரி தான் பிரதமர்.


saravanan
செப் 23, 2024 18:54

நிதின் கட்கரி சந்தேகமோ, கவலைப்படவோ தேவையில்லை நான்காவதாக முறையாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நரேந்திர மோடி அவர்களே மீண்டும் பிரதமராக ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்.


Rasheel
செப் 23, 2024 18:07

நாவடக்கம் இல்லாத மனிதர். மத்திய அரசுக்கு குழி பறிக்க நிறையே பேர் அமைச்சரவையில் உள்ளனர்.


saravanan
செப் 23, 2024 18:03

நிதின் கட்கரி சந்தேகமோ, கவலைப்படவோ தேவையில்லை நான்காவதாக முறையாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நரேந்திர மோடி அவர்களே மீண்டும் பிரதமராக ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்.


சண்முகம்
செப் 23, 2024 17:52

பக்கத்தில் நிற்பது கவுண்டமணியா?


sundarsvpr
செப் 23, 2024 16:41

ஜவஹர் மகள் இந்திரா களத்தில் தோல்வி அடைந்தார் அதன் விளைவு அடக்குமுறை தர்பார்எமெர்கெனசி எழுந்தது. இந்த தைரியம் நரேந்திரன் இடம் நினைந்து பார்க்கமுடியாது. இந்த தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் பல தடவை குடிஅரசு ஆட்சி நடந்துஇருக்கும். ஒரு மதத்தை மட்டும் தாக்குவது ஜனநாயக அவமானம் தானே. . தாக்கப்படும் ஹிந்து மத ஜனங்கள் ஏன் ஜனநாயக அவமரியாதை கருதவில்லை. ?


vbs manian
செப் 23, 2024 16:29

இப்போதெல்லாம் பயங்கர போடி வைத்து பேசுகிறார்.


Sundar R
செப் 23, 2024 14:34

கட்கரி ஒரு தீர்க்கதரிசி. அவர் மிகவும் சரியாக ராம்தாஸ் அதாவாலேயைப் பற்றி பேசியிருக்கிறார். கட்கரி அவர்கள் சொல்வது உள்ளூர் ஐஜேகே-க்கும் பொருந்தும். வாட் எ லவ்லி கட்கரிஜி?


Barakat Ali
செப் 23, 2024 14:23

கட்கரி சொன்னது இதைத்தான் ... ஆனால் சொல்லாமல் விட்டது "யார் யாரோ அடுத்த பிரதமர் ன்னு பேச்சு அடிபடுது ...... ஆனா இந்தாப்பா .... இந்த நாற்காலியில் இனி நீயே உட்காரு ன்னு மோடி சொல்லமாட்டேன்றாரே ...."


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை