உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியை குறை கூறும் எண்ணம் இல்லை

ஆட்சியை குறை கூறும் எண்ணம் இல்லை

மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அ ளவிற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் வெளி வந்ததும், ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதோடு விவகாரத்தை முடிக்க தி.மு.க., அரசு திட்டமிட்டது. ஆனால், அ.தி.மு.க.,வின் அழுத்தம் காரணமாக மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார். சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்ட கவுன்சிலர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். மதுரையில் இரு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கென எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க., ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துகளை சட்டசபையில் பேசுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களாகவே பழனிசாமி பிரசாரத்தில் பங்கேற்கின்றனர். யாரும் அவர்களை அழைக்கவில்லை. - செல்லுார் ராஜு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை