உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்: வேதனையைப் பகிர்ந்த இளையராஜா!

மகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்: வேதனையைப் பகிர்ந்த இளையராஜா!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி. இவரும் பின்னணி பாடகி. ஏராளமான பாடல்களை அவர் பாடி உள்ளார். இவர் 47 வயதில் கடந்த ஆண்டு ஜன.,25 ல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையடுத்து இளையராஜா 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ml06wd80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் அவர் கூறியதாவது: பவதாரணி எங்களை விட்டுப் பிரிந்த பின்புதான், எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது; இன்று அவரது நினைவு நாள். கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்; இப்போது அது எனக்கு வேதனையைத் தருகிறது.பவதாரணியின் பிறந்த நாளன்று (பிப்., 12) நினைவுநாள் நிகழ்ச்சி நடத்தும் எண்ணம் உள்ளது. அதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

visu
ஜன 26, 2025 09:07

அவர் நோயினால் இறந்தார் இவர் அன்பு காரணமாக அதை தன் தவறென்கிறார்


தமிழன்
ஜன 25, 2025 23:06

உனக்கு பாரதிராஜாவிடமும், எஸ்.பி.பி இடமும், சண்டை போட்டு வம்பிழுப்பதிலும் சொந்த தம்பி கங்கை அமரனை முன்னேற விடாமல் தடுத்து வைப்பதிலுமே குறியாய் இருந்தாய் எண்ணம் போல் வாழ்க்கை


m.n.balasubramani
ஜன 25, 2025 19:53

காசு பணம் துட்டு என்று செல்ல கூடாது ராசா , இப்ப வருந்தி என்ன பயன்


தியாகு
ஜன 25, 2025 23:22

அட பேக்கு, காசு பணத்திற்கு அலைவது என்பது வேறு, தொழில் பக்தி என்பது வேறு. இசை ஞானியிடம் இருந்தது தொழில் பக்தி. தண்நிலை மறக்கும் தொழில் பக்தி. அதனால்தான் ஆறாயிரம் பாடல்களை இயற்றி தமிழர்களுக்கு தனது இசையால் ஐம்பது வருடங்களாக மன நிம்மதி கொடுக்கிறார்.


Laddoo
ஜன 31, 2025 14:28

தியாகு அவர்களின் கருத்து சரியே. தன் திறமை மீது இருக்கும் தன்னம்பிக்கையை மற்றவர் கர்வம் என்றால் அதற்கு அவர் பொறுப்பல்ல.


M Ramachandran
ஜன 25, 2025 18:08

வருத்தமளிக்கும் செய்தி.


சமீபத்திய செய்தி