உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷாவை சந்தித்தேன்: ஓபிஎஸ் பேட்டி

அமித்ஷாவை சந்தித்தேன்: ஓபிஎஸ் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டில்லி சென்று விட்டு திரும்பிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும், தேவைப்பட்டால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசுவேன் என்றும் கூறினார்.அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பாஜ கூட்டணியில் அவர் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்தார். லோக்சபா தேர்தலிலும் பாஜ கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.அதிமுக பாஜ கூட்டணியில் அவரையும், தினகரனையும் சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மறுத்துவிட்டார். இதனையடுத்து பாஜ கூட்டணியில் இருந்து இருவரும் விலகினர்.அதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என இபிஎஸ்க்கு கெடு விதித்த அவர், தவறினால் புதிய கட்சியை துவக்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் அவர் திடீர் பயணமாக நேற்று டில்லி சென்றார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்கவும், சட்ட ஆலோசனை பெறவும், டில்லி சென்றுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில் டில்லி சென்று விட்டு சென்னை திரும்பிய ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேவைப்பட்டால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்