உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் பதவி குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும்: சொல்கிறார் துரைமுருகன்

துணை முதல்வர் பதவி குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும்: சொல்கிறார் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: '' துணை முதல்வர் பதவியில் இருப்பதா இல்லையா என்பது குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும். இ.பி.எஸ்., அல்ல, '' என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.காட்பாடியில் நிருபர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர்,' சட்டசபையில் அதிக காலம் இருந்தவர், மூத்த அமைச்சர். திமுகவுக்காக சிறை சென்றவர் துரைமுருகன். அவருக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை. மகன் உதயநிதிக்கு மட்டும் கொடுத்துள்ளனர். இது தான் நாடு போற்றும் நான்கு ஆண்டு மகத்தான சாதனையா என இபிஎஸ் பேசுகிறார்' என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த துரைமுருகன்,' அந்த பதவியில் நான் இருக்கிறதா இல்லையா என நான் முடிவு செய்ய வேண்டியது. அவர் இல்லை' என பதிலளித்தார்.மேலும் மற்றொரு கேள்விக்கு, ' ஒரு தொகுதியில் எப்படி இத்தனை முறை வெற்றி பெற முடிகிறது என பலர் கேட்கின்றனர். நீங்கள் தொகுதியை தொகுதியாக பார்க்கின்றீர்கள். நான் கோவிலாக பார்க்கின்றேன்.எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் என் கண்ணுக்கு தெரிந்த தெய்வங்கள்.தொகுதியில் திரும்ப வெற்றி பெற உண்மையாக இருக்க வேண்டும். எம்எல்ஏக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஊழல் இல்லாமல் வாழ்ந்துள்ளேன். எனது வாழ்க்கை சுத்தமான வாழ்க்கை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

lunch point
ஜூலை 27, 2025 15:44

சுதந்திர போராட்டத்திற்கு சிறைக்கு சென்ற தமிழர்கள் தமிழ்நாட்டில் இல்லை இவர்கள் சிலை இதுதான் தற்போது தமிழ்நாட்டின் ஆட்சியாளர் சாதனை


lunch point
ஜூலை 27, 2025 15:40

தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் இதுவரை பிற மொழியாளர்கள் தமிழ்நாட்டை ஆளவில்லை அடிமைப் படுத்தினார்கள் இன்றுவரை இதுதான் தமிழரின் இனமே


RAINBOW
ஜூலை 27, 2025 15:33

அப்ப கொள்ளை அடித்துள்ள கோடிகள் மூட்டை தூக்கி சம்பாதித்தததா?


A R HARSHA MITHRAN
ஜூலை 27, 2025 14:30

யார் வர வேண்டும் என்று முடிவு யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் வாக்காளர்கள் யார் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யார் அய்யா சரியா செய்ய போறீங்க இலவசம் இல்லாமல் எங்கள் வரி பணத்தை முறையாக மக்கள் சேவை செய்ய???


Lkanth
ஜூலை 26, 2025 22:43

இவர் மகன் வெற்றிக்கு காரணம் அ திமுக பெண் MLA விலை போனதால்? இவர் வெற்றிக்கு காரணம் அ திமுக வேட்பாளர் விலை போனதால் ? உளறுவாயன் இவரை பற்றிய ரகசியங்கள் நிறைய இருக்கிறது.


Raj
ஜூலை 26, 2025 22:32

ஐயையோ புல்லரிக்குது கடைசியா நீங்க சொன்னத கேட்டு


Thambiraja
ஜூலை 26, 2025 15:44

நீ ஊழல் இல்லாமல் 50 வருஷம் ,,,,காமெடி அருமை


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 26, 2025 10:15

அண்ணே ஒருகால் அங்க ஓட்டு போடுறவங்க நம்ம பங்களாதேஷ் பார்ட்டியா இருபணுங்களா.


ameen
ஜூலை 26, 2025 10:55

அப்போ பாங்லதேஷ் மக்கள் தமிழகத்தில் ஓட்டு போடுற அளவுக்கு இருக்குது என்றால் அமித்ஷா உள்துறையை கவனிப்பது இல்லை,அதை கண்காணிக்க வேண்டிய மோடியும் அதை கவனிப்பது இல்லை...ஒட்டுமொத்தமாக பாஜக ஆட்சி நாட்டிற்கு கேடு என நீங்கள் சொல்வது புரிகிறது


Govindaraj Soundaraj
ஜூலை 26, 2025 09:52

அருமை


Raj Sel
ஜூலை 26, 2025 09:26

பக்கா டீ திருடன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை