உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்றே சொன்னேன்... இன்று இ.பி.எஸ்., ரூட்டு மாறிட்டார்: துணை முதல்வர் உதயநிதி

அன்றே சொன்னேன்... இன்று இ.பி.எஸ்., ரூட்டு மாறிட்டார்: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: 'இன்று டில்லியில் வழி மாறி, 3 கார்களில் மாறி பா.ஜ., அலுவலகத்திற்கு சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு என்னுடைய வாழ்த்துக்கள்,' என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: சட்டசபையில் நான் பதிலுரை ஆற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., ஒருமுறை கூட அவையில் இருப்பதில்லை. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இ.பி.எஸ்., என்னுடைய காரில் ஏறி அவர் செல்ல முயன்றார். அப்போது, என்னுடைய காரை எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரச்னை இல்லை என்றேன். அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., எங்கள் கார் எப்போதும் வழி மாறி போகாது என்றார். ஆனால், இன்று டில்லியில் வழி மாறி, 3 கார்களில் மாறி அவங்க கட்சி அலுவலகத்திற்கு சென்றதாக கூறினார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். பொதுவாக ஒரு பேப்பரில் எழுதும் சில 'உ' போட்டு எழுதத் தொடங்குவார்கள். ஆனால், நம்முடைய முதல்வர் 'ரூ' போட்டு இந்தப் பட்ஜெட்டை தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட தலைவர் இருக்கும் வரை தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல எந்தத் திணிப்பையும் செய்ய முடியாது, இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:5 மண்டலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் உணவுத்திருவிழா நடத்தப்படும். 120 வட்டாரங்களில் ரூ.1,000 கோடியில் வாழ்ந்து காட்டுவோம் 3.0 திட்டம் செயல்படுத்தப்படும்ரூ.66 கோடியில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். நிலம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்; 22 சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் நிறைவு பெறும்விளையாட்டு வீரர்கள் திறமைக்கேற்ப உதவிதத் தொகை வழங்கப்படும்சென்னை, மதுரையில் 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெறும். மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 19 மாதங்களில் ரூ.21,000 கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

S BALAMURUGAN
மார் 29, 2025 18:36

இபிஎஸ் தங்கள் ரூட்டுக்கு மாறுவார் என எதிர்பார்த்தீர்கள். தங்களுடைய பாதை தவறான பாதை என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே அவர் சரியான பாதையை தேர்ந்தெடுத்தார் இதில் என்ன தவறு.


v s perumal
மார் 29, 2025 13:33

தமிழ்நாடு சீரழிகிறது: முன்னேற்றம் எங்கே , போலீஸ் துறையின் வேலை கேள்விக்குறியாக உள்ளது , டாஸ்மாக் அநியாயம், லஞ்சம் இன்று வேலை நடக்காது , சாலைகள் திறம் இழந்து முக்கியசாலை விளக்குகள் இல்லை, துப்புரவு மோசம், குப்பை நாற்றம். பேச்சு அரசியல் நிறுத்தி, செயல்பாடு அரசியல் காட்டுங்கள்"


RAMESH
மார் 29, 2025 06:13

உன் தாத்தா திருட்டு ரயில் மாறிய ரூட்டை விட யாரும் மாற முடியாது


S BALAMURUGAN
மார் 29, 2025 18:38

திருட்டு ரயில் எனும் கருத்தை இனி மாற்றங்கள் திருட்டுத்தனமாக மேற்படி நபர் ரயிலில் பயணம் செய்தார் என்பதை குறிப்பிடுங்கள்.


Ethiraj
மார் 29, 2025 05:58

What is the work of DY CM except making political statements and inaugaratinh few projects or meetings He is NON PERFORMING MINISTER.


Ram The Donn Lee
மார் 29, 2025 05:00

Your Party is the Betrayer for Entire Religion, Culture, Languages etc.......... Do you & Your belongings are the curse of the entire Universe not only Tamilnadu. Mr. Drug. Mafia. Katchi


kumar
மார் 28, 2025 23:25

"பொதுவாக ஒரு பேப்பரில் எழுதும் சில உ போட்டு எழுதத் தொடங்குவார்கள். ஆனால், நம்முடைய முதல்வர் ரூ போட்டு இந்தப் பட்ஜெட்டை தொடங்கியுள்ளார்." சரி தான். அது புள்ளையார் சுழி ன்னு சொல்ல வாய் வராத தற்குறி, இந்து விரோதி , உ ங்குது பொதுவா மக்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் ன்னு கடவுளை வேண்டிக்கிட்டு புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பாங்க . ஆனா உன் குடும்பத்துக்கு பணம் தானே முக்கியம் . அதனால் தான் அப்பா ரூ போட்டு ஆரம்பித்த்தார் . ரைட்டு தானே .


chinnamanibalan
மார் 28, 2025 19:15

தமிழகத்தில் ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி கலாச்சாரம் சீரும் சிறப்புமாக செழித்து இருக்கும் வரை, திமுக வை அவ்வளவு எளிதில் அசைக்க முடியாது.


loganathan shanmugam
மார் 28, 2025 18:56

முதலில் பள்ளி கட்டிடங்களை சீரமையுங்கள். பிறகு விளையாட்டு மைதானங்களை அமைக்கலாம்


N Sasikumar Yadhav
மார் 28, 2025 18:17

இவுரு பெரிய அப்பாடக்கரு இவுரு பேசும்போது அவையில் இருக்கனுமாம் . இவர் யாரோ எழுதி கொடுத்த சீட்டை தப்புதப்பாக படிப்பதை உட்கார்ந்து கேட்கனுமாம்


HoneyBee
மார் 28, 2025 16:12

ஓஓஓஓஓ. நீட் முதல் கையெழுத்து சொன்ன மாதிரியா. பொய் பேசலாம் ப்ரோ ஆனா எப்பவும் பொய்யே பேசகூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை