உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; சொல்கிறார் இ.பி.எஸ்.,

தேர்தலுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; சொல்கிறார் இ.பி.எஸ்.,

சேலம்: 'சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0f99dhzs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும், மேலே இருக்கும் சக்கரம் கீழே வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். இந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சியல்ல. எந்தக் கட்சிக்கும் நிரந்தர வெற்றியோ, தோல்வியோ கிடையாது. கூட்டணி பலத்தை தான் தி.மு.க., நம்புகிறது. அவர்களுக்கு தனியாக பலம் இல்லை. நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். 3 முறை பார்லிமென்ட் உறுப்பினராக போட்டியிட்டேன். அமைச்சர், முதல்வர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் உங்களால் கிடைக்க பெற்றது. என்றைக்கும், ' நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். எனது வெற்றிக்காக பாடுபட்டவர்களை கண்ணை இமை காப்பது போன்று காப்பேன். இது உறுதி. லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் மக்கள் ஓட்டளிக்கின்றனர். அடுத்து வரும் பைனல் மேட்சில் அ.தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். அ.தி.மு.க.,வின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். கட்டடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதை போல அ.தி.மு.க.,வில் கிளை கழகம் வலுவாக உள்ளது.எதிரிகள் முதுகை காட்டி ஓடிவிட்டனர். தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள்; எத்தனை முறை வந்தாலும் சேலம் அ.தி.மு.க.,வின் கோட்டை தான். அ.தி.மு.க.,வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வர முடியும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை. போதைப்பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக காவல்துறை தலைமை இயக்குநரே கூறியுள்ளார்.

மக்கள் முடிவு

நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: விஜய் ஒரு முன்னணி நடிகர் அவரிடம் ரசிகர் பட்டாளம் உள்ளது. த.வெ.க., முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். பொது சேவை செய்ய நினைத்து விஜய் கட்சி துவங்கியுள்ளார். விஜய் பொதுக் கூட்டத்திற்கு மட்டுமல்ல அ.தி.மு.க., போராட்டங்களுக்கும் தி.மு.க., அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ்., 'தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sam Dev
அக் 23, 2024 09:03

ஆமாம் நீங்களை எல்லோருமே மெண்டல் ஆகலாம், கீழ்பாக்கத்திலுள்ள மெண்டல் ஆஸ்ப்பித்திருக்கும் போகலாம்.


பேசும் தமிழன்
அக் 23, 2024 08:16

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.... கொடநாடு குற்றவாளிகள் உள்ளே போகலாம்.... இல்லை இவர் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்.... எது வேண்டுமானாலும் நடக்கலாம்.


kumar
அக் 22, 2024 21:45

உங்கள் அகங்காரத்தையும் மமதையையும் விட்டு விட்டு, உண்மை நிலையை அறிந்து கொண்டு, பா ஜ க வுடன் கூட்டு வைத்தால் மட்டுமே குடும்ப ஊழல் கட்சியை விரட்டி நீங்கள் ஆட்சிக்கு வருவது முடியும் . 2024 ல் செய்த தவறை மறுபடி செய்ய வேண்டாம் . அயல் மதங்களை சேர்ந்தோர் பெரும்பாலும் உங்களை ஆதரிக்க மாட்டார்கள் . அவர்களை திருப்தி செய்ய உங்களை மாற்றி மக்களை ஏமாற்றாதீர்கள் .


முருகன்
அக் 22, 2024 21:25

உண்மைதான் உங்கள் கட்சியே இல்லாமல் போகலாம்


kulandai kannan
அக் 22, 2024 20:35

52 ஆண்டுகளாகக் கொள்கை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் கட்சியை நடத்தியதே அதிமுகவின் பெரும் சாதனை.


Nallavanaga Viruppam
அக் 22, 2024 17:34

தன்னாலேயே தனிச்சு நிக்க முடியாம கூட்டணி எதிர்பார்த்துவிட்டு, அடுத்தவர்களை கூட்டணி பலத்தினால்தான் ஆட்சியில் உள்ளார்கள் என்று கூறுவது அபத்தம். ஒரு நாள் dmkvum admkvum கூட்டணி வைத்தால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.


Vijay D Ratnam
அக் 22, 2024 17:19

எடப்பாடியாரே, கூட்டணி அமைவது போல அமையட்டும். திமுக கூட்டணி கரன்சி கோடிகள் என்ற ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்டு இருப்பதால் அந்த கூட்டணி உடையாது. அநேகமாக பாஜக பாமக தேமுதிக புதிய தமிழகம், தமாகா, அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடலாம். நீங்கள் அதிமுகவை 234 தொகுதிகளில் தனித்து களமிறங்க தயாராகுங்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டைஇலை , அண்ணா உருவம் பொறித்த கொடி. இவை நான்கும் தமிழக மக்கள் மனதுக்கு நெருக்கமான எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். வாரிசு எவனுக்கும் சீட் கொடுக்காதீர்கள். அதிமுகவுக்கு ஆபத்தை ஏற்படுத்தப்போவது திமுக கூட்டணியோ பாஜக கூட்டணியோ அல்ல. ஒரு சின்ன பிளேடு ஒங்க வாக்கு வங்கியை ஓட்டை போடும். யெஸ், சபரீசன் பைனான்சில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி. திமுகவின் எதிர்ப்பு வாக்குளை சேதப்படுத்த நடத்தப்படும் கட்சி . தொகுதிக்கு 7000 - 8000 வாக்குகளை வாங்கி டெபாசிட் இழந்தாலும் அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்காக நடத்தப்படும் கட்சி. திமுக நாம் தமிழர் கள்ள உறவை பொதுமேடைகளில் வெட்டவெளிச்சம் ஆக்குங்கள். அவர்களுக்குள் உள்ள டீலிங்ஸ்களை பொதுமக்கள் மத்தியில் போட்டு உடையுங்கள்.


Narayanan Sa
அக் 22, 2024 16:54

அவர் சொன்னது போல எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது அவை அழிந்து போகும்.


saiprakash
அக் 22, 2024 16:48

ஐயா EPS அவர்களே நீங்கள் வாழ்க்கையில் யாராவது ஒருத்தருக்காவது நீங்கள் உண்மையாக நேர்மையாக நடந்துள்ளீர்களா


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 16:41

மேல இருக்கிற சக்கரமா? அது கீழ வருமா? கீழ இருக்கிற சக்கரம் மேல போகுமா? என்ன சொல்றார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை