உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது செலவு என்று சொல்லமாட்டேன்; சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இது செலவு என்று சொல்லமாட்டேன்; சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காலை உணவு திட்டம் ஆண்டும் ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவு என்று சொல்லமாட்டேன். சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட உடன் குழந்தைகள் மாதிரி எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. நீங்கள் எப்படி இன்றைக்கு முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்களோ, அது மாதிரி எனக்கு இன்றைக்கு ஆக்டிவான தினம் தான்.

பசியும், பிணியும்

இன்று மனசுக்கு ரொம்ப நிறைவான நாள். 20 லட்சம் மாணவர்கள் இன்று காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடு தான், சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லி இருக்கிறது. கல்வி அறிவை வழங்குவதாக மட்டும் பள்ளிகள் இருக்க கூடாது.மாணவர்களின் வயிற்று பசியையும் போக்க வேண்டும். காலை உணவு திட்டத்தை தொடங்கியதற்கு காரணம் என்னவென்றால், ஆட்சி பொறுப்பெற்ற சில நாட்களில் சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவர்களின் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டேன்.

இது செலவு அல்ல

நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். இதனை மனதில் வைத்து தான் காலை உணவு திட்டத்தை அறிவித்தேன். காலை உணவு திட்டத்தை நானே நேரில் கண்காணித்து வருகிறேன். ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இது செலவு என்று சொல்லமாட்டேன். சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தர போகிற முதலீடு இது.

சோர்வாக…!

பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசி காரணமாக சோர்வாக இருக்க மாட்டார்கள். காலை உணவு திட்டம் தொடங்கியதில் இருந்து நேரடியாக கண்காணித்து வருகிறேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை. டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்து உள்ளது. மருத்துவமனைக்கு போவது குறைந்து இருக்கிறது. காலை உணவு திட்டத்தில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆல் தி பெஸ்ட்

கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னாடியாக நாம் இந்த திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வருகிறோம் என்பது நமக்கு எல்லாம் பெருமை. மாணவர்கள் நல்லா சாப்பிடுங்கள், நல்லா படிங்கள், வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் எங்களுக்கு எல்லாமே. எப்பொழுதும் உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். இருப்போம். குழந்தைகளுக்கு ஆல் தி பெஸ்ட்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மிகவும் முக்கியம்: பகவந்த் மான்

சென்னையில் நடந்த நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது: கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பஞ்சாப் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது போன்ற சிறப்பான திட்டம் வேறு ஒன்றில்லை; மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. தமிழக உணவு தான் தேசிய உணவு. இவ்வாறு பகவந்த் மான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

வைகுண்டம்
ஆக 27, 2025 07:26

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப வருக்கு எல்லாம் இன்வெஸ்ட்மென்ட் தான்.


Svs Yaadum oore
ஆக 26, 2025 16:23

இந்த திட்டத்தை அக்ஷயபாத்ரா அரசுக்கு எவ்வித செலவில்லாமல் செயல்படுத்த முன்வந்தது .....ஆனால் அது சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் விடியல் தடுத்து விட்டது .....இப்பொது மத சார்பின்மையாக புனித அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் துவக்கி உள்ளார்கள் ...


joe
ஆக 26, 2025 16:15

ஏண்டா ,இதுலியுமா நீ ஊழல் வார்த்தை வுடுறே .என்னமோ இவன் அப்பன் பாட்டன் வீட்டு சொத்திலிருந்து செய்ற மாதிரி யோக்கியனா பேசுறான். இந்த ஆளும் காம்போதி அரசியல்வாதி . நீயோ ஒரு தேச துரோக ஊழல்வாதி .உன் கட்சியின் சொத்தோ தேசத்துரோக ஊழல் சொத்து .எத்தனை பேறுக்கிட்ட எவ்வளவு தேச துரோக சொத்தை பிடுங்கி இருக்கிறே அல்லது ஆக்கிரமித்திருக்கிறே .சொல்லு ஸ்டாலின் அய்யா அவர்களே .சொல்லு .ஆப்பு ஆப்பு மத்தியில் உனக்கும் உன்கட்சியின் சொத்துக்கும் வருது .ஆப்பு .ஆப்பு .


Narayanan
ஆக 26, 2025 16:12

"சோஷியல் இன்வெஸ்ட்மென்ட்" இதற்கு தமிழ்வார்த்தை கிடைக்கவில்லையா ??


Narayanan
ஆக 26, 2025 16:10

மரணித்தவரை மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லாமல் "ஆழ்ந்த துயிலில் இருக்கிறார்" என்று சொல்லுங்கள் ஸ்டாலின்


Anantharaman Srinivasan
ஆக 26, 2025 15:41

கலைஞர் ஆட்சிகாலத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக்கண்டு அனைத்து ஏழைகளையும் ஒழித்து விட்ட மாதிரி இதுவும் ஒரு பை நிரப்பும் சூருட்டல் திட்டம்.


ஆரூர் ரங்
ஆக 26, 2025 15:05

இதே திட்டத்தை தனியார் அக்ஷயபாத்ரா தன்னார்வ அமைப்பு அரசுக்கு எவ்வித செலவில்லாமல் செயல்படுத்த முயன்றது. ஆனா (ஊழலுக்கு வாய்ப்பில்லை என்பதால்?) ஸ்டிக்கர் அரசே செய்கிறது. ஆனா 80 சதவீத அரசுப்பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகளில்லை. முதலில் அதற்கு வழி செய்யட்டும்.


Svs Yaadum oore
ஆக 26, 2025 14:03

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் உணவு வழங்கி, இத்திட்டத்தை விடியல் துவக்கி வைக்கிறாராம் ...சிறப்பு விருந்தினராக, பஞ்சாப் மாநில முதல்வர் .... இந்த பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு அளித்ததும் இந்த புனித கும்பலை சேர்ந்த விடியல் மதம் மாற்றும் கும்பல் பாரளுமன்ற உறுப்பினர் ...இப்படி வடக்கன் ஆதரவுடன் விடியல் வருங்கால பாரத துணை பிரதமர் .....மாநிலத்தில் சின்னவர் .. மதம் மாற்றும் கும்பல் திட்டம் இதுதான் ....


V RAMASWAMY
ஆக 26, 2025 13:46

மக்கள் சொல்கிறார்கள், எந்த பெயர் வைத்தாலும் அது ஆட்டை போட்டக்கூடிய ஓட்டைகளை வைத்துள்ள திட்டங்களென்று. .


D Natarajan
ஆக 26, 2025 13:43

எப்போது மாலை சிற்றுண்டி, இரவு உணவு. வெகு சீக்கிரம், தேர்தலுக்கு முன் எதிர் பார்க்கலாம்


Anantharaman Srinivasan
ஆக 26, 2025 15:37

MGR ஆட்சிகாலத்தில் காலை பல்பொடி முதல் இரவு பசும்பால் வரை திட்டம் இருந்ததே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை