உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இப்ராஹிம்; அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டா?

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இப்ராஹிம்; அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள செய்யது இப்ராஹிம், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம், 52. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக இருந்தார். சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் செங்குன்றம் குடோனில் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைனை கடத்த முயன்றபோது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.தொடர் விசாரணையில், செய்யது இப்ராஹிம் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும், கோடிக்கணக்கில், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் கூறுகையில், 'எங்களின் முதற்கட்ட விசாரணையில், செய்யது இப்ராஹிம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதில் அரசியல் புள்ளிகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அதனால், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 14:06

எங்களைப் பொறுத்தவரைக்கும் போதை மருந்து ஹராம் ..... ஆனா மத்தவிங்களுக்கு கொடுத்து அவங்க வாழ்க்கையை நாசமாக்குவோம் .... நாங்க என்ன செஞ்சாலும் எங்களுக்கு இறைவன் சுவனத்தை ரெடியா ஆக்கி வெச்சு எழுபத்தி இரண்டை ஃபிரெஷ் ஆக கொடுப்பான் ....


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:59

அடப்பாவமே .


Nandakumar Naidu.
ஆக 01, 2024 13:12

அரசியல் வாதிகள் துணையில்லாமல் இவர் அவ்வாறு செய்திருக்க முடியாது. பாரதத்தின் நிலை இந்த மாதிரி சமூக விரோதிகளால் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ தெரியவில்லை.


Kumar Kumzi
ஆக 01, 2024 12:02

தேசத்துரோக கட்சி தீய திமுக பதவிக்காகவும் பணத்துக்காகவும் எந்த லெவலுக்கு போவானுங்க


Kumar Kumzi
ஆக 01, 2024 12:02

தேசத்துரோக கட்சி தீய திமுக பதவிக்காகவும் பணத்துக்காகவும் எந்த லெவலுக்கு போவானுங்க


N.Purushothaman
ஆக 01, 2024 12:02

முதல்வர் புகைப்படத்தை வைத்து கொண்டு இவன் இப்படி செஞ்சி இருக்கான்னா அது சமூக நீதியை காக்கத்தான் என்பது தெளிவாகிறது ...அடுத்த முப்பெரும் விழாவில் இவனின் சேவைக்கு கட்சி விருது வழங்கி அங்கீகரிக்க வேண்டும் ...


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 14:03

புருஷ் ஜி ... மோடி மற்றும் ஷா மிகவும் மென்மையானவர்களாக ஆகிவிட்டனர்...


sridhar
ஆக 01, 2024 10:57

சிம்பிள், தமிழக போலீஸ் பிடித்தால் அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சியில், மைனாரிட்டி மதத்தில் இல்லை இல்லை என்று அர்த்தம். மத்திய அரசின் துறை பிடித்தால் திமுக அல்லது கூட்டணி கட்சியில் அவர் இருக்கிறார் என்று அர்த்தம் .


Anantharaman Srinivasan
ஆக 01, 2024 10:47

தொண்டன் முதல் MP வரை கட்சியிருப்பதே இதுபோன்ற வேலைகளை செய்வதற்கே. யோக்கியன் கட்சியில் சேரமாட்டான்.உடல் வருத்தி வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்றுவான்.


ஆரூர் ரங்
ஆக 01, 2024 10:30

இலங்கை, ஆப்கன் தீவீரவாத இயக்கங்கள் போதைப் பொருள் வணிகம் மூலம் நிதி திரட்டின. இப்போது திராவிஷப் பிரிவினைவாத ஆட்களும் அதே வழியில்.


ஆரூர் ரங்
ஆக 01, 2024 10:28

மதுவை அறிமுகப்படுத்திய கட்சி காலமாற்றத்துக்கு ஏற்ற வகையில் புதுப்புது ப்ராடக்ட் களை கொண்டு வந்து மயக்குகிறது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 10:16

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இப்ராஹிம்... அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டா? என்ன கேள்வி இது? டீம்காவின் சிறுபாண்மைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்ததாகச் செய்தியிலேயே உள்ளது ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை