உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்பைக்கு 3 ஏசி மின் ரயில் தயாரிக்கிறது ஐ.சி.எப்.,

மும்பைக்கு 3 ஏசி மின் ரயில் தயாரிக்கிறது ஐ.சி.எப்.,

சென்னை:மும்பை ரயில்வேக்கு மூன்று, 'ஏசி' மின்சார ரயில்களை தயாரித்து வழங்கும் பணியை, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்க, சென்னை ஐ.சி.எப்., ஆலை முடிவு செய்துள்ளது. இதனால், சென்னைக்கு தேவையான, 'ஏசி' புறநகர் மின்சார ரயில் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், நவீன வகையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 12 பெட்டிகள் உடைய புதுவகை, 'ஏசி' மின்சார ரயில், 2018ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது, 'வந்தே பாரத்' போல இருப்பதால், ரயிலில் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை எளிதாக சென்று வர இயலும். அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் உடையது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகளும் உள்ளன. அனைத்து பெட்டிகளிலும், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இந்த வகை, 'ஏசி' மின்சார ரயில்கள் அதிகளவில் தயாரிக்கப்படவில்லை. இந்த நிதியாண்டில், மும்பை ரயில்வே கோட்டத்துக்கு நான்கு, 'ஏசி' மின்சார ரயில்கள் தயாரிக்குமாறு, ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல், 'ஏசி' ரயில் தயாரித்து அனுப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள மூன்று, 'ஏசி' ரயில்களையும் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதனால், சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு, 'ஏசி' ரயில்களை, அடுத்த நிதி ஆண்டில் தான் தயாரிக்க முடியும். சென்னையில், 'ஏசி' மின்சார ரயில் இயக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை