உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணை பலாத்காரம் செய்தால் துாக்கில் போட சட்டம்!

பெண்ணை பலாத்காரம் செய்தால் துாக்கில் போட சட்டம்!

சென்னை : பெண்களை பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை; பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன. சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின், 1998ம் ஆண்டு தமிழ்நாடு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம்; 2025ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் தமிழ்நாடு திருத்த சட்டம் என, இரண்டு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார். அவற்றில் கூறியிருப்பதாவது:பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை தடுக்க, 1998ல் தமிழ்நாடு பெண்களை கேலி செய்தல் தடை சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் அது, தமிழ்நாடு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம் என, மறு பெயரிடப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தொழில்நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவதன் விளைவாக, பல்வேறு வழிமுறைகள் வழியே, பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் வழியாக பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை, சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக, சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இதனால், இது போன்ற மோசமான செயல்கள் குறைக்கப்படும்.எனவே, பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வலுப்படுத்த, முதன்மை சட்டத்தின் நோக்கத்தை விரிவுப்படுத்த, பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை வழங்கவும் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.கல்வி நிலையம், விடுதி, கோவில் அல்லது பிற வழிபாட்டிடம், திரையரங்கு, உணவு விடுதி, உணவகம், மருத்துவமனை, வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள், விளக்குகள் பொருத்துதல் என, பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், போலீசாருக்கு 24 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும்.

தண்டனை விபரம்:

குற்றம் - தண்டனை

பாலியல் பலாத்காரம் - 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் அல்லது ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை12 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல் ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனைபாலியல் பலாத்காரம், மரணத்தை விளைவிக்கும் அல்லது செயலற்ற நிலையை விளைவிக்கும் காயத்தை ஏற்படுத்துதல் - ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனைகூட்டு பாலியல் பலாத்காரம் - ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் தண்டனை18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் - ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனைமீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கிற குற்றவாளிகள் - மரண தண்டனை அல்லது ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம்சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல் - மூன்று ஆண்டுகளுக்கு குறையாத, ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்துதல் - மூன்று ஆண்டுகளுக்கு குறையாத, ஐந்தாண்டுகள் வரை சிறை ஆகியவற்றில் இரண்டில் ஒன்று மற்றும் அபராதம்பெண்ணின் ஆடையை அகற்றும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது முறையற்று பலத்தை பயன்படுத்துதல் - ஐந்தாண்டுகளுக்கு குறையாத, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்மறைந்து காணும் பாலியல் கிளர்ச்சி - இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்பெண்ணை பின்தொடர்தல் - ஐந்தாண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்; இரண்டாம் முறை ஏழு ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்அமிலம் பயன்படுத்தி கொடுங்காயம் விளைவித்தல் - ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை.

'தண்டனைகளை கடுமையாக்க வேண்டியது கட்டாயம்!'

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, இரண்டு சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கி தரும் தி.மு.க., அரசு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும், பெண்களை முன்னேற்றி வரும் அரசாக செயல்பட்டு வருகிறது. இதன் வழியாக, பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூக பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கி தருவதில், தமிழக அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது. பெண்களுக்கு எதிரான 86 சதவீதத்திற்கு மேலான வழக்குகளில், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லுாரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து, 2.39 லட்சத்துக்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், துாக்கு தண்டனை பெற்று கொடுத்தது, இந்த அரசு தான்.அனைத்து பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது, யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்க வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில், சட்டங்களில் ஏற்கனவே இத்தகைய குற்றங்களுக்கு, தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

S.V.Srinivasan
பிப் 06, 2025 07:43

இந்த சட்டம் அண்ணா பல்கலை புகழ் ஞான சேகருக்கு உண்டா, இல்லையா ?? விளக்கம் தரவும் முக்கியமந்திரி அவர்களே.


Dr. Muthuramalingam Ramasubbu
ஜன 18, 2025 18:54

"பெண்ணின் ஆடையை அகற்றும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது முறையற்று பலத்தை பயன்படுத்துதல் - ஐந்தாண்டுகளுக்கு குறையாத, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்." ஜெயலலிதா சேலை சட்ட மன்றில் அவிழ்த்தவருக்கு என்ன ஆகும்?


Mr Krish Tamilnadu
ஜன 16, 2025 14:04

ஆணவமும், அகங்காரமும் செயற்கை. குடும்பத்தின் தலைமை என்ற ஆணவம். குடும்ப உறுப்பினர்களின் உதாசீனத்தில் நொறுங்கி விடும். தனிமை, வேலைப்பளு, சமுதாய கோபம், அகங்காரத்தை தூண்டுகிறது. மீடியாக்கள் வடிகாலுக்கான வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.


இராம தாசன்
ஜன 13, 2025 23:54

இந்த மாதிரி சட்டம் எல்லாம் நீதி மன்றத்தில் செல்லாது என்று தெரிந்தும் ஏன் இந்த நாடகம்? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுங்கள்


S.V.Srinivasan
பிப் 06, 2025 07:45

இவருடைய தொழிலே ட்ராமா போடுவதுதான் .


Sundar Pas
ஜன 12, 2025 11:09

போட்ட எல்லா மாவு கட்டுக்களுமே சும்மா நாடகம்தான் அய்யா, நம்பிட்டிங்களா? ஐயோ அய்யோஓஒ


Kalaiselvan Periasamy
ஜன 12, 2025 07:19

ஞான சேகரனுக்கு தூக்கு கொடுத்து அதை உடனே நிறைவேற்றினால் இந்த புதிய சட்டத்தை நம்பலாம் . இல்லையே ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்தததே இந்த கேஸிலும் நடக்கும் தயாராக இருங்கள் காசு வாங்கி ஒட்டு போடும் மக்களே .


இராம தாசன்
ஜன 13, 2025 23:46

அவன் விடுதலை ஆனவுடன் விடியல் துணை முதல்வர் கட்டி தழுவி வரவேற்பார்


S.V.Srinivasan
ஜன 12, 2025 06:42

தூக்குல போட சட்டம் வந்தா 75% உங்க ஆளுங்கதானே இருப்பாங்க.


naranam
ஜன 11, 2025 22:06

அப்போ திமுக அதிமுக திக ஸார் எல்லாம் ஒழிஞ்சாங்கன்னு சொல்லுங்க..


Mediagoons
ஜன 11, 2025 21:59

பெண்களின் பாதுகாப்பு அரண் திமுக என்பது அனைவரும் அறிந்ததே .


M S RAGHUNATHAN
ஜன 11, 2025 21:53

Whether any state government has the legislative powers to enact or amend Cr.P C and IPC . Because the above two are common to all the citizens throughout India/Bharath.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை