உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாமின் வழங்கினால் செந்தில் பாலாஜி விசாரணையை தடுப்பார்

ஜாமின் வழங்கினால் செந்தில் பாலாஜி விசாரணையை தடுப்பார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால், அவர் தன் சுதந்திரத்தை பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தி, விசாரணையை தடுக்க வாய்ப்புள்ளது' என, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு, ஏற்கனவே செந்தில்பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி தரப்பில் 3வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி துணை இயக்குநர் கார்த்திக் தாசரி சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.மனு விபரம்:வழக்கு விசாரணையின் துவக்க நிலையில் இருந்தே, மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை; ஒத்துழைத்ததாக கூறுவது தவறு. மனுதாரர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல. கைது குறித்து, அவரின் குடும்ப உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இவற்றை, நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.நீதிமன்றத்தில், ஏற்கனவே டிஜிட்டல் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரரிடம் விசாரணை நிறைவு பெற்று விட்டது; காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதாலும், சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக கருத முடியாது.கைது செய்யப்பட்டு சிறையில், 182 நாட்களாக இருப்பதாக கூறுவது தவறு. இலாகா இல்லாத அமைச்சராக, ஜூன் 14 முதல் ஜூலை 17 வரை, மருத்துவமனையில் இருந்துள்ளார்.ஜூலை, 17 முதல் அக்டோபர் 9 வரை, சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். மனுதாரர், தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.அமைச்சர் என்ற முறையில் அனைத்து சலுகைகளும் அனுபவித்து வரும் அவர், சக்தி மற்றும் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தி, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.வழக்கின் அனைத்து முக்கிய உண்மைகளையும் மறைத்து, மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் நோக்கில், மீண்டும், மீண்டும் அதே காரணங்கள் அடிப்படையில் ஜாமின் கேட்டுள்ளார். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Narayanan
ஜன 09, 2024 15:39

அசோக்கை பற்றி யாரும் ஏன் விவாதிக்கவில்லை அவர் நிலை என்ன? பாலாஜிக்கு ஜாமின் மட்டும் கொடுத்துப்பாருங்கள் துள்ளி எழுந்து ஈரோட்டில் பிரச்சாரத்தினபோது அதுவும் காங்கிரெஸ்க்காரனின் வெற்றிக்கு ஓடி ஓடி போன மாதிரி ஓடுவார்


N.Purushothaman
ஜன 09, 2024 14:11

இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தாலும் நன்றாக தின்று கொழுத்த நண்டாக தான் இருக்கிறார் ....இவரோட தம்பி உயிருடன் தான் இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை ....சிறையில் இருக்குற தன்னுடைய புருசனுக்கு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த இந்த அமைச்சரின் மனைவி போல இவர் தம்பிடியின் மனைவி செய்யாதது ஏனோ ?


A1Suresh
ஜன 09, 2024 14:03

ஆமாம் எங்களுக்கு பயம் தான் . ஊழல்செய்து விட்டு சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்கும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளிடம் , நாட்டை கெடுக்கும் நாசக்காரர்களிடம் பயம் தான் .


Muthiah.G
ஜன 09, 2024 14:01

செந்தில் பாலாஜியின் சகோதரன் எங்கே ? என நீதிபதி ஏன் கேட்கவில்லை அல்லது நீதிமன்றத்தில் ஏன் சரனடைய வில்லை என நீதிபதி ஏன் கேட்கவில்லை.


கனோஜ் ஆங்ரே
ஜன 09, 2024 11:39

///சக்தி மற்றும் செல்வாக்கு மிக்க நபர் என்பதால்...//// சக்தி மற்றும் செல்வாக்குமிக்க நபர் இன்றைய தேதி வரை ஜெயில்லதானய்யா இருக்காரு...? உள்ளே புடிச்சு போட்ட பிறகும்... அந்தாள பார்த்து அலறுகிறீர்களே...? நீங்களே அலறுகிறீர்கள் என்றால் உண்மையில் அவன் பெரிய ஆளுதான்.... அப்ப நீங்க டம்மி பீசா....? உங்களுக்கெல்லாம் முந்தாநாள் பதில் கொடுத்தானுங்க பாரு, பெங்காலி... அவனுங்கதான்யா உங்களுக்கு லாயக்கு.... நியாயமா, அமைதியாக நடக்குற தமிழ்நாட்டுக்காரன பார்த்தா அவ்வளவு இளக்காரம்...?


vbs manian
ஜன 09, 2024 11:11

போகிற போக்கை பார்த்தல் நிரபராதி என்று விடுதலையானாலும் ஆவார்.


Sampath Kumar
ஜன 09, 2024 09:52

உங்க அமலா பல் துரைகிட்ட தான் தகுந்த ஆதாரம் இருக்கே இவருடன் சேர்ந்து தொள்ளாயிரம் பேரு மீது குற்ற பத்திரிகை சமர்ப்பித்தீர்களே இந்தியாவிலே வரும் இரண்டு கோடி ஊழல் வாழ்க்கையில் இதனை பேரை சேர்த்து சாதனை புரிந்து உள்ளது இந்த ஏவல் துரி இதனை முக்கத்திறம் இருந்தும் அவரை வேலி விட மனசு இல்லை வாழ்க்கை முடுக்கிவர் என்று விதண்டாவாதம் செய்வதன் நோக்கம் புரியாமல் இல்லை இவரை வைத்து தீ மு க புள்ளிகளை வலிக்கும் அப்புறம் இவரை பிஜேபில் சேர வைக்கணும் என்ற திட்டம் தானே தவிர வேறு ஊன்றும் கிடையாது


Duruvesan
ஜன 09, 2024 11:43

சார் இவருக்கு முன்னதை துறைக்கு ஜாமீன் கிடைக்கும் என்ன துரை மினிஸ்டர் இல்ல, விடியலுக்கு ஏமாத்துவது புடிக்காது ,வெச்சி செய்வாரு ,செந்திலு இன்னும் மூணு வருசத்துக்கு மினிஸ்டர் தான்


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 09:31

நீதிபதி அல்லியால் இறுதியான வழங்க இயலவில்லையெனின் தலைமை நீதிபதி மாற்று நீதிபதி நியமனம் செய்யலாமே? ச ஊழலில் சுகம் அனுபவிக்கும்போது இனிக்கும் ஆனால் சிறை மட்டும் ஏன் கசக்கிறது.? தவறு செய்தவர் பதவியில் நீடிப்பது தவறு என்று நீதிமன்றம் அறிந்தும் உத்தரவு போடவில்லையென்றால் இதற்கு தீர்வுகாணவேண்டியது யார்? அரசா நீதிமன்றமா? சட்டவிதியின் முன் தர்மம் நிற்காது.


spr
ஜன 09, 2024 07:50

மனுதாரர், தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.என்பது உண்மையே அமைச்சர் என்ற முறையில் அனைத்து சலுகைகளையும், அனுபவித்துக் கொண்டு உள்ளேயிருந்து கொண்டே முதல்வரை வற்புறுத்தி அவர் சொற்படி நடக்க வைக்கிறார் தேர்தல் செலவுகளைத் தாமே ஏற்பதாகவும் சொல்கிறார் என்று இணைய தளங்களில் செய்திகள் வருகின்றனவே முதல்வரும் முடிவு செய்யவில்லை நீதிமன்றங்களும் தீர்ப்புச் சொல்லவில்லை இப்பொழுது அமுலாக்கத்துறை மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும் காவற்துறையும் நடத்தும் தாக்குதல்கள் அதனால் விசாரணையில் ஆர்வம் காட்டாத அதிகாரிகள் மோடியின் அரசியல் அணுகுமுறை தமிழக முதல்வர் அனுசரித்துப் போகும் முறை கழக வழக்காடுபவர்களின் திறமை அமுலாக்கத் துறையிலிருக்கும் கருப்பு ஆடுகள் சாட்சியங்களைக் கலைக்கும் வாய்ப்பு பிறழ் சாட்சியங்கள் இதனால் எல்லாம் அவரது விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை


S.Bala
ஜன 09, 2024 12:13

Wait & Watch.


குமரி குருவி
ஜன 09, 2024 07:50

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தலை பொங்கலை சிறையில் கொண்டாடுவார்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை