உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் சாராயத்தை ஒழிப்பேன்: அன்புமணி

ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் சாராயத்தை ஒழிப்பேன்: அன்புமணி

சென்னை: ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் சாராயத்தை ஒழிப்பேன் என்று பா.ம.க., அன்புமணி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது‛நாங்கள் இட ஒதுக்கீடு, வேலை, படிப்பு, சுயமரியாதையை தான் கேட்கிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் தான் 109 டாஸ்மாக் கடைகள் உள்ளன; 24 மணி நேரமும் மது விற்பனையாகிறது. கஞ்சா, போதைப் பொருள் விற்பவர்கள் எல்லாம் தி.மு.க.,வினரே. மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் இறந்ததும், விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராய சாவு நடந்திருக்காது. என்னிடம் ஆட்சியை கொடுத்தால், ஆறு நாட்களில் கள்ளச் சாராயம், கஞ்சாவை ஒழிப்பேன். தமிழக போலீசாரை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. வரும் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்ற இலக்கோடு தமிழக மக்கள் செயல்பட வேண்டும்; தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும்'. இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மனிதன்
ஆக 15, 2025 20:09

அதைவிட கொடிய "போதை" ஜாதி எனும் போதை...,அதை திகட்ட,திகட்ட உம்மக்களுக்கு புகட்டுகிறீர்களே... முதலில் அதை ஒழியுங்கள்... பிறகு பார்ப்போம்....


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2025 20:09

செமையான தில்லு தலைவா .


kalyanasundaram
ஆக 15, 2025 17:25

he is another papoooooo


baala
ஆக 15, 2025 17:17

பதவிக்கு வரணும். அப்படித்தானே


Vasan
ஆக 15, 2025 14:39

Mr.Ramadoss and Mr.Anbumani are not able to solve even their own family problem. Do they expect people of Tamilnadu to vote for them to solve peoples problems? Comedy.


M suresh
ஆக 15, 2025 14:36

மறுத்தவர் அன்புமணி நல்ல மனிதர் உங்கள் செயல் சூப்பர் .


mathavan
ஆக 15, 2025 12:33

கொட்டிட்டு போங்க... இதுவேற..... காமடி பன்னிகிட்டுஇருக்கு, கூட்டத்துல இருக்கிற எல்லாரும் தண்ணியபோட்டு வந்திருக்கனுங்க அவனுங்களே உனக்கு ஒட்டு போடமாட்டானுங்க,


ராஜா
ஆக 15, 2025 07:10

குரு அய்யாவின் காலத்தில் வெட்டப்படாத மரங்களை மட்டுமே வெட்டுவதற்கு அனுமதி கொடுப்போம்,


Venkat.M
ஆக 15, 2025 07:02

மதுவை ஒழிக்க எந்த அரசும் முன்வராது.ஏன் என்றால் அரசு சராசரி பெண்களை டிவி சீரியல் அடிமையாகவும் ஆண்கள் மதுவுக்கு அடிமையாகவும் வைத்து இருப்பது இவர்களுக்கு வசதியாகவும் இவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்ப வைக்க வசதியாக உள்ளது


MUTHU
ஆக 15, 2025 09:03

உண்மையே. மைண்ட் வாஷ் செய்யப்பட்ட மக்கள். இவர்களால் எந்த புரட்சியும் செய்து விட இயலாது.


சமீபத்திய செய்தி