உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் கண் ஜாடை காட்டியிருந்தால்கவர்னரின் டிரவுசரை கிழித்து இருப்போம் * முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ஸ்டாலின் கண் ஜாடை காட்டியிருந்தால்கவர்னரின் டிரவுசரை கிழித்து இருப்போம் * முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ராமநாதபுரம்:''முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின், கோட் சூட்டை கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்,'' என, கவர்னருக்கு எதிராக ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி பேசினார். இது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட,ு முன்னாள் அமைச்சரும் தி.மு.க., மாவட்ட அவை தலைவருமான சத்தியமூர்த்தி பேசியதாவது:சட்டசபை கூட்டத்தொடரில் வேண்டும் என்றே கவர்னர் ரவி வெளிநடப்பு செய்துள்ளார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் கண் ஜாடை காட்டி இருந்தால் வெளிநடப்பு செய்த கவர்னரின் கோட், சூட்டை எல்லாம் கிழித்து அவரை அண்ட்ராயரோடு விரட்டி இருப்போம்.தி.மு.க.,வை சீண்டினால் ஏடாகூடமாக நடக்கும் என பா.ஜ.,வினரை வைத்து சீண்டிப் பார்க்கிறார் கவர்னர். பா.ஜ.,வினரை முதல்வர் பார்த்துக் கொள்வார். கவர்னர் குழப்பத்தாலேயே, தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., இடையே கள்ள கூட்டணி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

samvijayv
ஜன 09, 2025 10:37

இந்த அளவுக்கு உங்களையும், உங்களின் கட்சியும் வளரவிட்டதால் இந்த தமிழத்தின் மக்களை ...உருவி விட்டவர்கள் நீங்கள் இதற்கு மேலும் பேசுவீர்கள் இன்னுமும் பேசுவீர்கள் என்ன செய்வது?, சரி 2026ல் இதற்கான முடிவினை பார்ப்போம்.


Vijay D Ratnam
ஜன 08, 2025 17:48

முன்னாள் அமைச்சர் கவர்னர் டிராமா புரியாம பினாத்துறாரு. சென்னை ஹைகோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் குற்றவாளிகள் என்று அறிவித்து இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்த பிறகும் அமித்ஷாவின் உத்தரவுப்படி பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்த இந்த கவர்னரை போல ஒருத்தர் திமுகவுக்கு கிடைப்பார்களா. திமுக பாஜக கள்ள உறவு ஸ்ட்ராங்கா இருக்கும் போது , கனிமொழி அமித்ஷா கள்ளக்கூட்டணி வலுவாக இருக்கும் போது, அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் வரை திமுகவை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது. அதிமுக வாக்குகளை சிதைக்க தமிழ்நாட்டில் பாஜக இருக்கும் போது, அல்லக்கை தேர்தல் ஆணையம் இருக்கும் போது ஸ்டாலினுக்கு என்ன கவலை. டீல் ஷேர் செட்டில்மெண்ட்ஸ்லாம் கரெக்ட்டா நடக்குது போல.


NRV
ஜன 08, 2025 17:28

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி -தேவை இல்லாத வார்த்தை இது


karthik
ஜன 08, 2025 13:38

2026 தேர்தலில் அண்ணனுக்கு சீட் உறுதி...வெட்டி ஆளு, ஒண்ணுத்துக்கும் உதவாத பொறம்போக்கு.


shyamnats
ஜன 08, 2025 12:09

இது போல் கட்சிக்காக பொங்குவதால், இவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டுமாய் விடியல் முதல்வரை வேண்டுகிறோம்.


haridoss jennathan
ஜன 08, 2025 10:30

ஐயா நம் முதல்வருக்கு இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் மாவட்டத்திற்கு ஒரு ஆள் இருந்தால் போதும். ஸ்டாலின் ஐயா விழுந்து விழுந்து மிக கவனமுடன் ஆளும் கட்சியாக வளர்ந்ததை, பொறுப்பில்லாமல் பேசி கட்சிக்கு அவ பெயர் உண்டாக்கி வரும் தேர்தலில் எதிர் கட்சிகளுக்கு மெல்ல அவள் கொடுத்து விடுகிறார்கள். நம் முதல்வர் அப்படிப்பட்டவர்களை கண்டிக்க வேண்டும்


Mani . V
ஜன 08, 2025 05:43

இவனையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ளனும். பிளடி இடியட்ஸ்.


நிக்கோல்தாம்சன்
ஜன 09, 2025 05:22

இன்னமும் அவர்களின் ஐடி விங் உங்களுக்கு மிரட்டல் தொனியில் மெயில் அனுப்பவில்லையா ?


நிக்கோல்தாம்சன்
ஜன 08, 2025 04:54

ஜெயலலிதா அம்மையார் தொடங்கி நேற்று மாணவிகள் வரை அதுதானே செய்து கொண்டுள்ளீர்கள் , மாறவே இல்லை , தமிழக வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இது புரியும்போது மீண்டும் 10 வருடம் வரவே முடியாது , ஆனா என்ன மாதம் 30000 கோடிகளை திருடிகிட்டு இருக்கீங்களே , பொழச்சுப்பீங்க , மிகப்பெரிய கார்பொரேட் கம்பெனிகள் , கல்வி நிறுவனங்களின் ஓனர் உங்க கட்சி உங்களுக்கு ன்ன


Priyan Vadanad
ஜன 08, 2025 02:03

இப்படி கேவலமான முறையில் பேசுபவர்களை ஏன் முதல்வர் கண்டிப்பதில்லை. கண்ணியமற்ற இவர்போன்ற நபர்களால் இந்த ஆட்சி இவர்களுக்கு முடியல் ஆட்சியாக இருக்கும். ஆனாலும் பாகற்காய் வந்துவிடக்கூடாதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை