உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்'' என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m5dkvdyi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தி.மு.க.,வுக்கு எது எதிர்க்கட்சி. அ.தி.மு.க., எதிர்க்கட்சியா? தி.மு.க., ஒரு கொள்கை வைத்து இருக்கிறது. ஊழல், லஞ்சம், கொள்ளை, மணல் கொள்ளை நடக்கிறது. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது? கொடிகள் வேறு வேறு ஆக இருக்கிறது. கொள்கையில் வேறுபாடு இருக்கிறதா?

நிடி ஆயோக் கூட்டம்

இவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். அவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். இவர்களும் இலவசம் அறிவிப்பார்கள். அவர்களும் இலவசம் அறிவிப்பார்கள். 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் இப்போது செல்வது ஏன்?

ரெய்டு வந்தால்..!

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள். இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த நாட்டை நிர்வாகம் செய்வது, சட்டசபை, பார்லிமென்டா? அல்லது நீதிமன்றமா ? என்ற கேள்வி எழுகிறது. எல்லா முடிவுகளையும் நீதிமன்றம் எடுத்தால், சட்டசபை, பார்லிமென்ட் தேவையில்லை. அதனை கலைத்து விடலாம். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
மே 23, 2025 21:19

ஐயா சீமான் விபரம் தெரியாமல் பேச கூடாது, முதல்வர் பிரதமரை பார்க்க போகவில்லை, நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகிறார், இது அவர் பொறுப்பு, போக கூடாது என்று சட்டமா ?அல்லது தவறா ? நேரடியாக எல்லோருக்கும் சொல்லி போகிறார், அதற்க்கு பதில் உங்கள் நண்பர் ஈ.பி.எஸ். கள்ளத்தனமாக இரவோடு இரவாக டெல்லி சென்று, 3 கார் மாறி, இரவு 12 மணிக்கு மக்கள் நல திட்டங்களை இரகசியமாக பேசினாராம், அவரை கிண்டல் பண்ணுவதுதான் சரி, நீயாயம். சும்மா அண்ணாமலை மாதிரி பேசவேணாம்


என்றும் இந்தியன்
மே 23, 2025 16:11

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள் ஸ்டாலின் சீமான் கிண்டல் - உண்மை தானே


G Mahalingam
மே 23, 2025 16:02

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திமுக ஊழல் கட்சி என்று தெரிகிறது. தண்டனை கிடைக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் திமுக அமைச்சர்களை இடைக்கால தடை விதித்து தண்டனையில் இருந்து தப்பித்து கொள்கிறார்கள்.


venugopal s
மே 23, 2025 15:51

இவர் அரசியலுக்கு வந்த பிறகு தான் இப்படி ஆகி விட்டாரா இல்லை பிறவியில் இருந்தே இப்படித்தானா?


Ravichandran
மே 23, 2025 15:13

பாம்பின் கால் பாம்பரியும். நாம் என்ன அறிவோம் என்றால் இருவரும் பாம்பு என்று. எனவே இருவருக்கும், தனக்ககென்று வரும் போது, நாட்டை பற்றி கவலை படமாட்டார்கள்.


Ramaswamy Jayaraman
மே 23, 2025 14:51

இவர் பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர் பதவிக்கு வந்தாலும், இதையேதான் செய்வார். நாம் ஆம் ஆத்மி கட்சியை பார்க்கவில்லையா. ஆனால் இவர் எங்கே பதவிக்கு வரப்போகிறார்.


Kjp
மே 23, 2025 14:49

உயர் நீதிமன்றம் நியாமான தீர்ப்பு அளித்தாலும் உச்ச நீதிமன்றம் காப்பாற்றி விடுகிறது.முதல்வரின் தந்தை சொன்னது போல் வாங்கப்பட்ட தீர்ப்பா வழங்கப்பட்ட தீர்ப்பா?


Ganapathy
மே 23, 2025 14:24

உண்மையான உண்மை.


Rajarajan
மே 23, 2025 14:01

நீங்க சொல்றது உண்மையா தான் தெரியுது. அவங்களும் மேற்கொண்டு நடவடிக்கையை நிறுத்திடறாங்களே.


Vasan
மே 23, 2025 13:49

The purpose DMK Chief going to Delhi is nothing but to gather information about Operation Sindhoor, to spread that information in other countries as per the committees formed. Please dont politicize it.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை