உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இங்க இருந்தா தலைவராகலாம் அங்க போனா வேலைக்காரனாகணும்: காங்., பொறுப்பாளர் பேட்டி

இங்க இருந்தா தலைவராகலாம் அங்க போனா வேலைக்காரனாகணும்: காங்., பொறுப்பாளர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை ;காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் அளித்த பேட்டி:கடந்த 10 ஆண்டுகளில், ஜனநாயகத்திற்கு பா.ஜ., முடிவுரை எழுதி வருகிறது. நாட்டில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள், தங்களது அலுவலகத்தை பா.ஜ., அலுவலகமாக மாற்றிவிட்டன. தமிழகத்திலுள்ள கோவில்களுக்கு செல்ல முடிந்த பிரதமர் மோடிக்கு, மணிப்பூர் ஏன் செல்ல முடியவில்லை? அங்கிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? தமிழக மக்களை நான் நம்புகிறேன். பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு சரியான பதிலடியை தமிழகத்தில் கொடுத்து வருகின்றனர். காங்கிரசில் உள்ள பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காணலாம். கட்சி மாறும் மனநிலையில் இருப்போருக்கு முக்கியமாக ஒன்றைக் கூறுகிறேன். காங்கிரசில் இருக்கும் வரை யாரும் தலைவராக ஆகலாம்; பா.ஜ.,விற்கு சென்றால் வேலைக்காரனாகத் தான் இருக்க வேண்டும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வெண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாநகராட்சியின், 92வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திலகர் மற்றும் பல்லடம் நகராட்சி பா.ஜ.,கவுன்சிலர் ஈஸ்வரி ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

K.Ramakrishnan
பிப் 23, 2024 19:18

தலைவர் ஆகலாம்.. சரி.. ஆனால் ஐ.டி., ஈடி, சிபிஐ என்று குடைச்சல் கொடுக்கிறார்களே... என்ன செய்வது.. அங்கே போனவுடனே புனிதர் பட்டம் கிடைக்கிறதே... உங்களால் அதை தர முடியாதே...


M Ramachandran
பிப் 23, 2024 19:02

காங்கிரஸில் பிச்சை காரர்களாக யிருப்பதியய் விட வேறு கட்சியில் தொண்டன் என்ற பெயராவது மிஞ்சும்


HoneyBee
பிப் 23, 2024 16:39

காமெடியா இருக்கு எப்போது தொண்டர்கள் தலைவராவது. அடிமைகளாகவே இருந்து சாகவேண்டும்.. இதுதான் திராவிட காங்கிரஸ் தன் தொண்டர்களுக்கு தரும் பரிசு.


vbs manian
பிப் 23, 2024 16:07

ethanai per thalaivar aanaarga sir.


Santhakumar Srinivasalu
பிப் 23, 2024 13:31

காங்கிரஸில் எல்லோரும் துண்டு போட்ட தலைவர்களைதான் பார்க்க முடிகிறது. யார் கட்சி வேலைக்காரன்?


Narayanan
பிப் 23, 2024 12:35

காங்கிரஸின் தற்போதேய தலைவராக இருப்பவர் கார்கே . ஆனால் அவரால் சுயமாக எந்த முடிவும் எடுக்கமுடியாமல் சாதாரண எம் பி . ராகுலை கேட்டுதான் எதையும் செய்கிறார் வேலைக்காரனாக .


Suppan
பிப் 23, 2024 11:50

"காங்கிரசில் இருக்கும் வரை யாரும் தலைவராக ஆகலாம்..." நல்ல ஜோக்குக்கு நன்றி அஜய்குமார் சாரே


SUDHAKAR JANAKIRAMA RAO
பிப் 23, 2024 11:19

எல்லோரும் வேலைக்காரர் ஆகலாம். ஆனால் எல்லோரும் எப்படி தலைவர் ஆகமுடியும்? பொறுப்பாளர் பொறுப்புடன் தான் பேசுகிறாரா?


duruvasar
பிப் 23, 2024 11:06

பிதற்றுவதை வைத்து பார்த்தால் ராகுலால் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது.


ஆரூர் ரங்
பிப் 23, 2024 10:29

மன்மோகன் போல கைகட்டி தத்தியின் கண்ணசைவுக்குக் காத்திருப்பதை விட நரசிம்ம ராவ் போல மக்கள் சேவகராக இருக்கலாம். ஆனால் இன்னொரு???? நரசிம்ம ராவை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை