உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம்!

போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி, 'பில்' பட்டியல் தயாரித்து, வணிகம் செய்வோர்களின் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம் செய்யப்பட வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.வணிக வரித்துறையின், கடந்த மாதத்திற்கான இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வு கூட்டம், சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மூர்த்தி, துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி, வணிக வரித்துறை ஆணையர் ஜெகந்நாதன் பங்கேற்றனர்.அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி 'பில்' பட்டியல் தயாரித்து, வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் ஜி.எஸ்.டி., பதிவு முடக்கம் செய்யப்பட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாக கோட்டங்களின் வாயிலாக, வரி வருவாய் அதிகரிக்க வேண்டும்; அதற்காக, அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rama adhavan
பிப் 10, 2024 16:22

எவ்வளவு வணிகர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர், வீடு வாடகைக்கு விடுவோர்,வரி கட்டாமல் ஏமாற்றுகின்றனர். அவர்களையும் பிடிக்க வேண்டும்.


தத்வமசி
பிப் 10, 2024 14:48

வெளிநாட்டு டாலராகவே வைத்திருப்பார்கள்.


GMM
பிப் 10, 2024 08:39

GST பதிவு online மூலம் மட்டும். மத்திய அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் முடக்க முடியாது? ரத்தும் online மூலம். பதிவு செய்த நபரிடம் மட்டும் தான் கடவு எண் (pass word) இருக்கும். அதனை ரத்து செய்ய மாநில மந்திரிக்கு அதிகாரம் உள்ளதா? போலி பில் தயாரித்தால் என்ன நடவடிக்கை என்று விதி இருக்கும். அதன் அடிப்படையில் தான் எடுக்க முடியும். திராவிடம் அதிகார போதையில் உள்ளது. அதிகாரிகளுக்கு வழிகாட்டி மந்திரி? இட்ட கட்டளை ஏற்று, கும்பிடு போட்டு பணியை அதிகாரிகள் காப்பாற்றி வருகின்றனர்.


Ramesh Sargam
பிப் 10, 2024 08:38

பலவேறு சில்லறை கடைகளில் பில் கொடுப்பதே இல்லை. அப்படி ஒரு சிலர் பில் வேண்டுமென்று கண்டிப்பாக கேட்டால், கடைக்காரர், பில் போட்டால் tax விழும். பரவா இல்லையா என்று கூறுவார்கள். பரவா இல்லை என்று ஒரு சிலர் பில் பெற்றுக்கொண்டு பொருள் வாங்குவார்கள். ஒரு சிலர் tax இல்லாமல், பில் இல்லாமல் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி செல்வார்கள். அப்படிப்பட்ட சில்லறை கடைகளை அதிகாரிகள் என்ன செய்வார்கள்? பில் இல்லாமல் பொருட்கள் விற்கும் கடைகள்தான் நாட்டில் அதிகம். அதனால் நாட்டின் tax வருமானம் பாதிக்காதா?


S THEYAGARAJAN
பிப் 10, 2024 14:32

சரியாய் சொன்னிங்க


Ramesh Sargam
பிப் 10, 2024 22:52

நன்றி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை