உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! '' என அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என வீர வசனம் பேசி, தமிழகத்தின் முதல்வராக, தமிழகத்தின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழகமா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7xokg9ty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? முதல்வர் ஸ்டாலின், அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?தி.மு.க., அலுவலகத்தின் மேல் மாடியில் சி.பி.ஐ., ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது மேஜையின் கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! நான் கேட்ட கேள்வி என்ன?யார் அந்த தம்பி ?உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, அமலாக்கத்துறை ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?டாஸ்மாக்கில் 'தம்பி' அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!மீண்டும் கேட்கிறேன் யார் அந்த தம்பி? இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K.n. Dhasarathan
மே 26, 2025 21:21

ஈ.பி. ஸ் க்கு வரலாறு ஒன்றும் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. ஐயா, ஸ்டாலின் சொல்கிறார் தனக்கு ஈ.டி யை பார்த்தும் பயமில்லை, மோடி யை பார்த்தும் பயமில்லை என்று, ஏன் நீங்கள் சொல்லவில்லை ? பொய்கள் சொல்லி ஏன் டெல்லி செண்றீர்கள் ? புண்ணியம் செய்யவா ? கொடநாடு வழக்கு கண்டு வாய்தா வாங்கி ஓடுவது ஏன் ? 2G வழக்கு எப்படி என்ன வாக ஆனது, ஏன் ? உண்மை வேண்டுமய்யா கூட்டணி இப்போதும் கிடையாது எப்போதும் கிடையாது என்று சொன்ன வாய் இப்போது எங்கே போனது ? மக்கள் சிரிப்பு சத்தம் இனிமேல் கேட்பீர்கள்.


RAMESH
மே 25, 2025 23:13

சார்....தம்பி.... அரக்கோணம்..... டாஸ்மாக் ஊழல்......இதை சார்ந்து உள்ள உரிமைகளை நிலை நாட்டவே தில்லி பயணம் என்று........ இப்போது எந்த கலர் பலூன்.... கெஜ்ரிவால் நிலை ஒரு தமிழனுக்கு வருமா.....கொடி பிடித்து பேரணி நடத்திய நீங்கள் கோவை கார் வெடிகுண்டு சம்பவத்திற்கு பதில் என்ன.... தவழ்ந்து சென்றதை விட இந்த நிலை ஐயகோ.... இப்படி ஆகி விட்டதே..... தமிழகத்தில் பாஜக வந்து விட கூடாது என்ற கோஷம் இனி கேட்க முடியாது


துர்வேஷ் சகாதேவன்
மே 21, 2025 22:44

ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு ஏம்பா


துர்வேஷ் சகாதேவன்
மே 21, 2025 22:40

வேளாண் சட்டம் , CAA போன்ற சட்டங்கள் வர காரணமா இருந்த நீங்க அடிமைத்தனத்தை பற்றி பேசுறீங்க வெட்கம் இன்றி , உங்களை கூட்டணிக்கு கூப்பிடவில்லை அடித்து இழுத்து பட்டீர் , மகன் துஷ்யந்தன் ஐ காப்பாற்ற நீங்க போட்ட வேஷம் தான் கூட்டணி


kr
மே 21, 2025 21:21

Yaaru antha sir. That question is not yet answered. Next question is Yaaru antha thambi. Don’t expect answers for such questions from this model.


Pandianpillai Pandi
மே 21, 2025 21:00

மாநில உரிமை பற்றி பேசவதற்கு அருகதை அற்ற கட்சி அதிமுக . அம்மையார் கர்நாடகா சிறையில் இருந்தபோது காவிரி தண்ணீர் வேண்டாம் எங்கள்அம்மாவை விடுவியுங்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்டிய கட்சி அதிமுக கட்சி. 10 வருடமாக ஆட்சியில் இருந்த அ தி மு க, கட்ச தீவை மீட்க ஒரு துரும்பை கூட எடுத்துபோடாத துருப்பிடித்த அதிமுக கட்ச தீவை பற்றி அரசியல் செய்வது நகைப்புக்குறியது தானே? தற்போது பாஜக உங்களுடன் தூண்டில் கூட்டணி வைத்திருக்கிறேதே அங்கிருக்கிர மீனவர்களை மீட்பதற்கு கெடு விதிக்கலாமே ? மறுபடியும் உங்கள் பேச்சு அடிமைதனதிற்கு அடிகோளமிடுவதாக தான் அமைகிறது. அதிமுக விரும்பாத கூட்டணி அமைத்துவிட்டு தூண்டிலில் மாட்டிவிட்ட மண்புழு கதைதான் உங்கள் நிலைமை . தமிழ்நாட்டு மக்கள் மீன் கள் அல்ல பாஜக வின் தூண்டிலில் சிக்குவதற்கு . எத்தனையோ தடைகளை தாண்டி மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்துகொண்டிருக்கும் எங்கள் முதல்வரை பார்த்து பொறாமையில் புலம்புவதாகாதான் உங்கள் விமர்சனம் அமைந்திருக்கிறது. சென்ற தேர்தலில் அம்மாவின் அதிர்வலை இருந்தது. இப்போ அதுகூட கிடையாது. மக்கள் முற்றிலும் வெறுக்கின்ற கட்சி அதிமுக.


vbs manian
மே 21, 2025 20:00

சபாஷ் சார் நீங்கள் இன்னும் துடிப்போடு இயங்க வேண்டும். தமிழகத்தை தற்போதைக்கு மீட்டெடுப்பது தலையாய கடமை.


முருகன்
மே 21, 2025 19:01

அடிப்படை மாநில உரிமைகளை கூட கேட்க தயங்கும் முடியாத நீங்கள் இதை பேசுவது வேடிக்கையாக உள்ளது


TMM
மே 21, 2025 19:41

மாநில உரிமைய(அரைத்த மாவு)கேக்குறாரோ இல்லையோ,திமுக கும்பல்போல அனைத்து உரிமைகளையும் அடகு வைக்கவில்லையே.


மீனவ நண்பன்
மே 21, 2025 19:51

எந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன ?


Haja Kuthubdeen
மே 21, 2025 20:25

இப்ப ஆட்சி திமுகதான்...அஇஅதிமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடியார் கேட்பார்.


joe
மே 21, 2025 18:59

இ பி ஸ் அவர்களின் பதில் சரியே .


Priyan Vadanad
மே 21, 2025 18:51

கருணாநிதியோ அல்லது ஸ்டாலினோ ஊர்ந்து தவழ்ந்து போனதுக்கு எந்த வீடியோவும் இல்லை. ஆனால் இவர் ஊர்ந்து நெளிந்து என்னமாய் போனது வீடியோவில் கண்டு சிரிக்க முடிந்ததே.


SUBBU,MADURAI
மே 21, 2025 20:12

அப்பத்துக்கு மதம்மாறிய அங்கி ஐயோ என்னை கொல்றாங்களே என்று கட்டுமரம் மரணக் கூப்பாடு போட்டது உமக்கு தெரியாதா?


Haja Kuthubdeen
மே 21, 2025 20:23

அந்த காலத்தில் இப்ப உள்ளது போல் வீடியோ..யூடியூப்..மீடியா எல்லாம் கிடையாது..அதற்காக நடந்த விசயங்களை மறக்கவோ மறுக்கவோ முடியாது..புரட்சிதலைவரை தோற்கடிக்கனும் என்றே காங்கிரர் 114தொகுதிகளிலும் திமுக 112 தொகுதிகளிலும் 1980ல் கூட்டணி போட்ட கட்சியும் காங்கிரசுடன் சரண்டர் ஆன கட்சியும் திமுக தான்.வரலாறு தெரியாம பேச வேண்டாம்.


SIVA
மே 21, 2025 20:32

இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு நானே இங்கு ஒரு அடிமை , ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் மானத்தோடும் வீரமாக பேசினோம் , ஊழல் வழக்கில் கைது செய்ய பட்டபோது அய்யோ கொலை பண்றாங்க... அய்யோ கொலை பண்றாங்க...என்று வீர வசனம் பேசினோம் . உச்சநீமன்றத்தில் அரசியலைமப்பு எரிக்கவில்லை வெறும் பேப்பரை தான் எரித்தோம் என்று வீர வசனம் பேசினோம் ....


sridhar
மே 21, 2025 21:03

கனிமொழிக்கு ராஜ்ய சபா எம்பி கிடைத்த கதை தெரியுமா தம்பி.


புதிய வீடியோ