வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எளிமையான மக்களுக்கு படிப்புக்கான உதவிகள் செய்யலாம் மருத்துவ உதவி செய்யலாம்.
திரு இளையராஜா அவர்கள், தன் சுய உழைப்பில் கிடைத்த வருமானத்தை அவர் விரும்பும் வழியில் செலவு செய்கிறார். இதில் கமெண்ட் இட , நமக்கு என்ன உரிமை இருக்கிறது.
,கடவுளுக்கு பணம் தேவையா????
இன்று 12-9-25 மூகாம்பிகையிடம் வேண்டினேன், மருத்துவமனையில் இருக்கும் என் அப்பாவின் மருத்துவசெலவுக்கு பணம் வேண்டி, ஆனால் எனக்கு இது வரை கிடைக்கவில்லை, மூகாம்பிகைக்கு கிடைத்ததில் எனக்கு 50,000 கொடுப்பாள் என்றுகூட நினைக்கிறேன். வணங்குகிறேன்.
ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா … ஓ, ஆமால்லே? அவரே மறந்திருப்பார்
நீளாயுளுடன் இளையராஜா மற்றும் அவர் குடும்பம், தொண்டு சிறக்க வாழ்க வளமுடன். நன்றி
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்.
தமிழ்நாட்டுக்காரன் கிட்ட பணத்தை சம்பாரிச்சி கன்னடக்காரன் கிட்ட குடுக்குறாரு,ஏன் தமிழ்நாட்டுல கோயில் இல்லையா ,இல்ல கஷ்ட படுறவன் இல்லையா ?...
தமிழ்நாட்டுக் கோவிலுக்கு குடுத்தா மறுநிமிஷமே அறங்கெட்ட கொள்ளையடிக்கும் துறை அந்த ஆபரணங்களையெல்லாம் திருடித் தின்னுடுவாங்கன்னு அவருக்குத் தெரியாதா...
கன்னட இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றும்போது ஒரு சமயம் பெங்களூர் சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு இசையமைப்பாளர் ஆக கடுமையாக முயற்சி செய்து ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் மனம் நொந்து போய் இருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்து வேண்டிக் கொள்ளும்படி கூற, அவர் அங்கே சென்று தனக்கு அருள் புரிய மனமுருகி வேண்டிக் கொண்டார். பிறகு தான் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து வாழ்க்கையில் உயர்ந்தார். அது முதல் அவர் கொல்லூர் மூகாம்பிகை இன் பக்தரானார்.
God bless you