உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள்: சர்ச்சைக்கு இளையராஜா முற்றுப்புள்ளி

பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள்: சர்ச்சைக்கு இளையராஜா முற்றுப்புள்ளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: என்னை மையமாக வைத்து பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். இசைஞானி இளையராஜா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oywrlywh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். இந் நிலையில், சர்ச்சை குறித்து இளையராஜா சமூக வலைதள பதிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது; என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sundarsvpr
டிச 17, 2024 14:57

இளைய ராஜா திருக்கோவிலுக்கு வருகிறார் என்பது இவ்வளவு பெரிய கூட்ட மக்களுக்கு எப்படி தெரியும்.? மடாதிபதிகளுஏன் க்கு எப்படி தெரியும். மடாதிபதிகள் பார்வையாளர்கள். இவர்களுக்கு திருக்கோயில் ஏன் மரியாதை செய்யவேண்டும் இந்த வரவேற்பு நிலையில். இளைய ராஜா எந்த விளக்கமும் அளிக்க தேவையில்லை. பட்டர் குழாமும் அரசும் மடாதிபதிகளும் இந்த நிகழ்வுகளுக்கு பதில் கூறவேண்டும்.


aaruthirumalai
டிச 17, 2024 13:14

மக்களை திசைதிருப்புவதற்காக உருவாக்கபட்டது.


Kasimani Baskaran
டிச 17, 2024 05:25

பாட நூல் நிறுவன விஷயம் வெளிவந்த விரக்தியில் மடைமாற்றம் செய்ய வேறு விஷயம் இல்லாததால் ஆண்டாளை கையிலெடுத்து இருக்கிறார்கள். ஆனால் அது பேராபத்தில் முடியப்போகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.


Kasimani Baskaran
டிச 17, 2024 05:23

தீம்க்காவினர் காக் பிட் அனுபவம் உள்ளவர்கள். ஆனால் அடிப்படை அறிவு மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.


J.V. Iyer
டிச 17, 2024 04:48

ஹிந்துஸ்தானில் இப்படி வதந்தி பரப்புகிறவர்களுக்கு கடுமையான சட்டம் வரவேண்டும். இவர்களுக்கு இதே தொழிலாக போய்விட்டது.


தாமரை மலர்கிறது
டிச 17, 2024 01:09

பணம் புகழ் இருக்கிறது என்பதால் ஒருவர் பயிற்சியின்றி பைவ் ஸ்டார் ஹோட்டலில் சமைக்க முடியுமா? ஜெட் அல்லது பிளேன் ஓட்ட முடியுமா? போரில் ஈடுபடமுடியுமா? பயிற்சியின்றி கார், பைக், படகு, கப்பல் அல்லது சைக்கிள் ஓட்ட முடியுமா? கம்ப்யூட்டர் சாஃட்வ்ர் டிசைன் செய்யமுடியுமா? அல்லது சர்ஜரி செய்ய முடியுமா அல்லது குறைந்து சட்டை துணி தைக்கதான் முடியுமா? அது போன்று தான் இதுவும். டாக்டர் இல்லாத எவரும் சர்ஜரி ரூமுக்குள் செல்ல முடியாது. பைலட் மட்டும் தான் காக்பிட்க்குள் செல்ல முடியும். செஃப் மட்டும் தான் சமைலறைக்குள் செல்லமுடியும். இதை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை.


தாமரை மலர்கிறது
டிச 17, 2024 00:59

பணம் புகழ் இருக்கிறது என்பதற்காக ஒருவர் அர்ச்சகர் ஆகிவிடமுடியாது. பணம் புகழ் இருந்தால் ஏரோபிளேனில் பயணிக்கலாம். ஆனால் பணம் புகழ் இருக்கிறது என்பதற்காக ஏரோபிளேனை ஓட்ட அனுமதிக்க முடியாது.


RAMAKRISHNAN NATESAN
டிச 16, 2024 23:49

வேற ஒண்ணுமில்ல இளையராஜா சார் ..... ஒன்னோட மாப்ள அதானியைப் பார்த்ததுக்கு எங்கிட்ட ஆதாரம் இருக்குது ....... காட்டுவேன் ன்னு அண்ணாமலை சொன்னதுதான் மெயின் காரணம் ......


GSR
டிச 16, 2024 22:04

ஜீயர்கள் அவர்கள் பாட்டுக்கும் சென்று வர வேண்டும். இளையராஜா என்றில்லை யாரையும் ஏன் உடன் சேர்த்துக் கொள்கிறார்கள்?


மோகன்
டிச 16, 2024 21:23

நாசமா போற உபி கள் . இதுதான் விடியா திருட்டு திராவிட மனப்பாங்கு.


சமீபத்திய செய்தி