உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று (ஏப்.,25) நேரில் ஆஜராகினர்.தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மணல் குவாரி ஒபந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3jk3mz02&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட கலெக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் கலெக்டர் தங்கவேல், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது. மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட கலெக்டர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆஜர்

இந்த வழக்கு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், லோக்சபா தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட கலெக்டர்கள் ஏப்ரல் 25ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டனர். அதன்படி, 5 கலெக்டர்களும் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ராம்கி
ஏப் 25, 2024 18:12

உயரதிகாரிகள் ஆற்றுமணல் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிப்பது கவலையளிக்கிறது


ராம்கி
ஏப் 25, 2024 17:43

தேன் கூட்டில் கை வைத்தவர்கள் தேனை சுவைப்பார்கள் என்று பேரறிஞர் கூறியுள்ளார் ஏழை ஊபீக்கள் கோடீஸ்வரர்கள் ஆன கதை இப்படி பிழைப்தால்தனோ?


Sridhar
ஏப் 25, 2024 15:52

இவங்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாது, இவங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவனையும் அவன் குடும்பத்தையும் பிடித்து உள்ளே வைத்து பெண்டு எடுத்தால்தான் இந்த மாதிரியான பொதுச்சொத்துக்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தமுடியும் ஒரு சின்ன கேஸ் போட்டாங்க, விசாரணை ஆறு மாசம் தள்ளிபோயிடிச்சு, இன்னும் என்னென்ன டகாலடி வேலைகளெல்லாம் செய்யப்போறானுங்களோ தெரியல, ஆனா இவுனுக டெக்னிக்கையெல்லாம் தாண்டி அரசு இயந்திரங்கள் மிக கடுமையாக செயல்பட்டு மிகவிரைவில் மொத்த கும்பலையும் சிறையிலடைப்பதோடில்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை முழுவதாக மீட்டெடுத்து அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும் அதேபோல் ஒவ்வொரு கொள்ளையாக கண்டுபிடித்து அதை செஞ்ச திருட்டு கும்பலை சேர்ந்தவர்களை வெறும் அரை ட்ராயரோடு நடுவீதியில் ஊர்வலமாக கொண்டுசெல்லவேண்டும் அதை காணும் ஒவ்வொருவரும் வரும் காலங்களில் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அஞ்சும்வகையில் அந்த நிகழ்வு அமையவேண்டும் நடக்குமா?


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஏப் 25, 2024 15:46

"படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவார் ஐயோவென்று போவார்" என்பது மஹா கவி பாரதியின் வாக்கு அரசுதான் இப்போது இந்த தமிழக மண்ணில் நடந்து கொண்டிருக்கிறது.


subramanian
ஏப் 25, 2024 14:36

இவர்கள் மனித இனத்திற்கு துரோகம் செய்தவர்கள்


seenivasan
ஏப் 25, 2024 14:16

மாவட்ட ஆட்சியாளர்கள் தாங்கள் படித்த படிப்பு மற்றும் IAS ஆவதற்கு தங்கள் பெற்றோர் செய்த தியாகம் ஆகிய அனைத்தையும் மறந்து, பணத்துக்கு விலை போன கிரிமினல்கள்


karthik
ஏப் 25, 2024 14:00

முழி திருட்டு முழி


vns
ஏப் 25, 2024 13:51

ஐந்து ஆட்சியாளர்களின் இரண்டு பேர் கிருத்துவ ஆட்சியாளர்கள் இது இந்து நாடா ?


ஆரூர் ரங்
ஏப் 25, 2024 13:46

அப்ரூவராக ஆகி நாட்டுக்கு நன்றி விசுவாசத்துடன் இருங்கள். ( என் எதிர்பார்ப்பு அதிகம்தான். அவங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருப்பார்களே )


ponssasi
ஏப் 25, 2024 13:36

பொன்முடி வழக்கிலும் இப்படி காலம் தாழ்த்தாமல் இருந்திருந்தால் அவர் இருக்குமிடம் வேறாக இருந்திருக்கும் இப்படி சாட்சிகள் பல்டியடித்திருக்க வாய்ப்பில்லை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை