உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலகளவில் யு.பி.ஐ.,முதலிடம்; பன்னாட்டு நிதியம் பாராட்டு

உலகளவில் யு.பி.ஐ.,முதலிடம்; பன்னாட்டு நிதியம் பாராட்டு

புதுடில்லி: உலகின் மிகப்பெரிய, விரைவான பணம் செலுத்தும் வழியாக யு.பி.ஐ., முறையை ஐ.எம்.எப்., அமைப்பு அங்கீகரித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஐ.எம்.எப்., அமைப்பு, 'வளர்ந்து வரும் டிஜிட்டல் சில்லரை பணம் செலுத்தும் முறை' என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு நடத்தியது. உலகின் மற்ற பணம் செலுத்தும் முறைகளைவிட, இந்தியாவின் யு.பி.ஐ., முறை மிகப்பெரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேர்ல்டுவைடு பிரைம் டைம் பார் ரியல் டைம் 2024 (ஏ.சி.ஐ., வேர்ல்டு வைடு) அறிக்கையின்படி, உலக அளவில் ரியல் டைம் பேமென்ட் முறைகளில் 49 சதவீத பங்கை யு.பி.ஐ., பிடித்திருக்கிறது. இந்தியாவில் 12,930 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரேசில், தாய்லாந்து, சீனா, தென்கொரியா நாடுகளின் பரிவர்த்தனைகள், இந்தியாவைவிட மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

2024--25 நிலவரம்

கியூ.ஆர்., கோடு பரிவர்த்தனைகள்56.86 கோடிபரிவர்த்தனை மேற்கொண்டவர்கள்6.50 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Venkatachalam, Chennai-87
டிச 10, 2025 15:25

கிரேட் நியூஸ். மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதே சமயத்தில் எக்ஸ் கான்+கிராஸ் நிதி முந்திரி ப.சி சார்பாக அளவில்லாத வருத்தம் அடைகிறோம். ப.சி. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் இண்டெர்நெட் பவர் எல்லாம் எப்புடி ன்னு அப்பவே கிண்டல் பண்ணாரு.


Modisha
டிச 10, 2025 11:10

பன்னாட்டு பாராட்டு, உள்நாட்டு தேச விரோதி எதிர்ப்பு.


KR india
டிச 10, 2025 10:40

முன்பு, மைக்ரோசாப்ட் விண்டோஸ் மொபைல் இருந்த போது, விண்டோஸ் மொபைல் ஸ்டோர்-ல், மைக்ரோசாப்ட் அக்கௌன்ட் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்யும் வசதி இருந்தது. நானும், மைக்ரோசாப்ட் மொபைல் பயன்படுத்தி, மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்யும் அந்த சமயத்தில், தயவுசெய்து மைக்ரோசாப்ட் அக்கௌன்ட்-ஐ பயன்படுத்துங்கள் என்று கூறும். அது பக்கத்திலேயே ஸ்கிப் மெனு Skip Microsoft Account இருக்கும். அதே போல், ஆண்ட்ராய்டு UPI செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வசதி, ஜிமெயில் அக்கௌன்ட் இல்லாமல், தரவிறக்கம் செய்ய அனுமதி வேண்டும். எந்த ஒரு துறையிலும் Monopoly ஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் Technological dictatorship தொழில்நுட்ப சர்வாதிகாரம் கூடவே கூடாது என்று ஐரோப்பிய யூனியனின் Digital Markets Act DMA and GDPR rule கூறுகிறது . இந்தியாவிலும் கூட மத்திய அரசு அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்களை, இந்திய அரசின் s apps mgov. gov.in ஆப் ஸ்டோர் இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்ற வேண்டகோள், அந்த வெளிநாட்டு நிறுவனங்களால் மதிக்கப் படாமல் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் Digital Markets Act DMA and GDPR rule இங்கே நம் நாட்டில் கட்டாயமாக்கினால் நமது வேண்டுகோள் மதிக்கப்படும் என்று நம்பலாம்.


Sankaran
டிச 10, 2025 07:31

உன்னதமான திட்டம். ஏழை எளிய மக்களும் UPI பரிவர்த்தனை செய்ய முடிகிறது. Hats off to BJP


surya krishna
டிச 10, 2025 05:54

கேட்டுச்சா பாகிஸ்தான அடிமை சிதம்பரம்.. காங்கிரஸ் எப்பொழுதும் நாட்டுக்கு துரோகம் செய்யும் தேசத் துரோகிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை