உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வியில் தங்கள் கொள்கைகளை திணிப்பதா?: மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

கல்வியில் தங்கள் கொள்கைகளை திணிப்பதா?: மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: தங்கள் கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தை மத்திய அரசு சீர்குலைக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் முதல் தவணை நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். நிபந்தனைகளின் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தர முடியும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தை மத்திய அரசு சீர்குலைக்கிறது. நீட் பிரச்னையைப் போல கல்வி பிரச்னையிலும் திமுக கபட நாடகம் ஆடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நீட்டை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i85iv7j5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மாணவர்கள் நிலைமை

மத்திய கல்வி திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும், கல்வி நிதியை போராடி பெற முடியாத திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., உடன் சமரசம் செய்த முதல்வர் ஸ்டாலின், தமிழக பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்தாதது ஏன்? மத்திய மாநில அரசு இணைந்து நடத்தும் நாடகங்களால் மாணவர்களின் நிலைமை மோசம் அடைந்துள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saranya Ilaya
ஆக 31, 2024 08:31

தங்கள் பிள்ளைகளை மும்மொழி கொள்கை உள்ள பள்ளியில் சேர்ப்பீர்கள். அரசு பள்ளிகளில் மும்மொழி வந்தால் என்ன?


panneer selvam
ஆக 29, 2024 00:03

more than 40 years ago , Education is in concurrent list .So central government has upper hand on framing of educational policy . Edappady ji , AIADMK was in power in state for more than 25 years , during that period , you have not done anything. Now you are raising your objection .


R.MURALIKRISHNAN
ஆக 28, 2024 23:13

அதில் இவருக்கு ஏதேனும் கமிஷன் இருக்கும்பா ....


தாமரை மலர்கிறது
ஆக 28, 2024 19:07

நண்டு சிண்டெல்லாம் மத்திய அரசை எதிர்த்து பேசக்கூடாது.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 28, 2024 18:56

இவர்களை சொல்லி தப்பில்லை, இதுபோன்ற திருட்டு திராவிட கொள்ளை, கயவர்களை நம்பி இன்னும் வோட்டை போடும் அறிவாளி ஹிந்து தமிழர்களை என்ன சொல்வது?


இராம தாசன்
ஆக 28, 2024 16:46

அப்போ கான்+கிராஸ் மற்றும் திராவிட கல்விகலவி திட்டம் மட்டும் சரியா?


Sridhar
ஆக 28, 2024 14:45

இந்த ஆள "தற்குறி"னு சொல்றதுல தப்பே இல்லன்னு தோணுது. மத்திய அரசு தங்கள் கல்வி கொள்கையை அறிவிச்சிடுச்சு. மாநில அரசு அதிலேந்து முரண்பட்டா அதுக்கான காரணம் சொல்லணும். புதிய கல்வி திட்டத்தில், ஐந்தாம் கிளாஸ் வரை தாய்மொழியில் பாடங்கள், அதற்குப்பிறகு மும்மொழி அதாவது தாய்மொழி, ஆங்கிலம் இவைதவிர இந்திய மொழிகளில் ஏதேனுமொன்று. அது மலையாளம், தெலுங்கு கன்னடம் ஏன் உருதுவாக கூட இருக்கலாம். தமிழகத்தில் ஏற்கனவே நிறைய தெலுங்கர்களும் கன்னடர்களும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். அவரவர் விருப்பத்திற்கேற்ப மொழிகளை தேர்ந்தெடுத்து படிப்பதில் மாநில அரசுக்கு என்ன பிரச்சனை? மற்ற மாநிலங்கள் அனைத்தும் இதை புரிந்துகொண்டு சம்மதித்து அந்த கல்வித்திட்டத்தை செவ்வனே அமல்படுத்தி தங்கள் மாணவர்களை மேம்படுத்துகிறார்கள். முன்பு கான்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது மொழி இந்தியாக இருக்கவேண்டும் என்றார்கள். அப்போது வாய்பொத்தி மௌனியாக இருந்தவர்கள், இப்போதும்கூட இவர்கள் நடத்தும் தனியார்பள்ளிகளில் இந்தியை திணிக்கும் கயவர்கள், இப்போது இந்தி கட்டாயமில்லை என்ற நிலையிலும் ஏன் இந்த கல்வித்திட்டத்தை எதிர்க்கவேண்டும்? pm ஸ்ரீ பள்ளிக்கூட திட்டமும் அதற்க்கான நிதி ஒதுக்கீடும் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை எனும்போது, முதலில் ஒப்புக்கொண்டு அப்புறம் காரணமே இல்லாமல் எதிர்த்து அதனால் மாணவர்களுக்கு பிரச்னையை உருவாக்கி.... ஏன் இந்த பித்தலாட்டம்? இதைக்கூட புரிந்துகொள்ளமுடியாதவர்களை தற்குறி என்று அழைக்காமல் வேறு எவ்வாறு அழைப்பது?


Sundar R
ஆக 28, 2024 14:17

நம் பாக்கெட்டில் இருந்து பணத்தை கொள்ளையடித்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்தும் திமுகவினரின் சொத்துக்களை மீட்டெடுத்து அரசாங்க கஜானாவில் அடைப்பது பற்றி ஆலோசனை சொன்னால் தான் ஈபிஎஸ் ஒரு சரியான எதிர்க்கட்சி தலைவர் என்று பொது ஜனங்களால் போற்றப்படுவார்.


sankar
ஆக 28, 2024 11:59

சோ - இப்போது - திமுக & அதிமுக இணைப்பு சாத்தியம்?


Murugesan
ஆக 28, 2024 10:58

மண்டையில மூளையற்ற தகுதியற்ற அயோக்கிய திராவிட அரசியல்வாதிங்க, கடைந்தெடுத்த கேவலமான கேடுகெட்ட கொள்ளைக்கார திருடன்கள் மக்களுக்கான பணத்த கொள்ளையடித்து வாழுகின்ற பிறவி கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை