உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேல்முறையீடு வழக்கில் மாஜி டி.ஜி.பி., வாதம்

மேல்முறையீடு வழக்கில் மாஜி டி.ஜி.பி., வாதம்

விழுப்புரம் -முன்னாள் டி.ஜி.பி.,யின் மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் சி.ஜே.எம்., கோர்ட் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி., ராஜேஸ்தாஸ், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இவ்வழக்கு விசாரணையில் பலமுறை கால அவகாசம் பெற்றும் ராஜேஸ்தாஸ் தரப்பில் வாதத்தை முன்வைக்கவில்லை. நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து ராஜேஸ்தாஸ் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை பதிவு செய்து கால அவகாசம் பெற்றார்.அதனைத் தொடர்ந்து, ராஜேஸ்தாஸ் நேற்று மதியம் 2:30 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜராகி ஒன்றரை மணி நேரம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார்.அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூர்ணிமா, வாதத்தை வரும் 5ம் தேதி தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ