உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்கம்: தமிழக ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் பங்கேற்பு

ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்கம்: தமிழக ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பகவத் ராமானுஜரின் பீடங்களை ஒருங்கிணைத்து, தென்னாச் சாரியார் சம்பிரதாய சபை நேற்று சென்னையில் துவக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், வானமாமலை, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கோவிலுார், ஆழ்வார்திருநகரி பிள்ளான், தொட்டாசார், எம்பார், ஆளவந்தார் உள்ளிட்ட 74 பீடங்களை நியமித்தார். அந்த சிம்மாசனாதி பதிகளின் வம்சத்தில், பல பீடங்களில் ஜீயராகவும், பல பீடங்களில் ஆச்சாரிய புருஷர்களாகவும் உள்ளனர். ஆலோசனை கூட்டம் இந்த 74 பீடங்கள், துவங்கிய காலகட்டத்தில் இருந்தே ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தன. பல்வேறு காலகட்டங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல ஜீயர்கள் ஈடுபட்டனர். அவர்களின் ஆசிர்வாதத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கை நாராயணனும் ஈடுபட்டார். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும் புதுார், காஞ்சிபுரம், ஆழ்வார்திருநகரி போன்ற பல இடங்களில் இதற்காக ஆச்சாரியார்களின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வழிநடத்தலின்படி, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ஆச்சாரியா புருஷர்கள், ஜீயர்களுடன் கலந்தாலோசித்தனர். பலரின் பெருமுயற்சியால், தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. சிறப்பு மலர் நேற்று காலை 8:00 மணிக்கு டாக்டர் வெங்கடேஷின் உபன்யாசத்துடன் விழா துவங்கியது. ஒரே மேடையில் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரிய சுவாமிகள், திருமலை அநந்தாண்பிள்ளை அக்கா ரக்கனி ராமானுஜாசாரியார் சுவாமிகள்... ஸ்ரீபெரும்புதுார் ஆசூரி அரவிந்தாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீரங்கம் கோவில் கந்தாடை சுத்தஸத்வம் திருவாழி அண்ணன் சிறுபுலியூர் சுவாமிகள், இளையவில்லி கண்ணன் சுவாமி உட்பட 50க்கும் மேற்பட்ட ஆச்சாரியார்களும், ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் உட்பட 13க்கும் மேற்பட்ட ஜீயர்களும் பங்கேற்றனர். விழா சிறப்பு மலரை, திருக்கோவிலுார் எம்பெருமானார் ஜீயர் வெளியிட, திருவெள்ளறை மேலத்திருமாளிகை அம்மாள் ஸ்ரீ விஷ்ணுசித்தன் சுவாமிகள் பெற்றுக் கொண்டார். ஆசிர்வாதம் சிறப்பு மலரில், திருமாளிகை எனும் ஒவ்வொரு பீடத்தை பற்றிய குறிப்பு, யார் தற்போதைய ஜீயர், ஆச்சாரியா புருஷர்கள் தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழாவில் பங்கேற்ற 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, ஜீயர்களும், ஆச்சாரியா புருஷர்களும் அக்ஷதை ஆசிர்வாதம் செய்தனர். பிற்பகல், ஜீயர்கள் மற்றும் ஆச்சாரியா புருஷர்கள் ஒருங்கிணைந்து, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபையை வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கை நாராயணன் மற்றும் விழாக் குழுவினர்களான கல்யாணி நாராயணன், மல்லி சதீஷ்குமார், சவுரிராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை