உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீர் தாக்குதல் எதிரொலி சுற்றுலாவை ரத்து செய்வோர் அதிகரிப்பு

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி சுற்றுலாவை ரத்து செய்வோர் அதிகரிப்பு

சென்னை:காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, எல்லையோர மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தோர், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.இதுகுறித்து, விமானம் மற்றும் ரயில்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வரும் ஏற்பாட்டாளர்கள் சிலர் கூறியதாவது: ஆண்டுதோறும் ஏப்., மே, ஜூன் மாதங்களில், கோடை விடுமுறையில் அதிகமானோர் சுற்றுலா செல்வர். காஷ்மீர் பகுதிக்கு செல்ல ஏராளமானோர் விரும்புகின்றனர். இதற்காக, நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து, விமானங்கள் மற்றும் ரயில்களில், சுற்றுலா செல்லும் திட்டங்களில், பொதுமக்கள் அதிக அளவில் முன்பதிவு செய்திருந்தனர்.சென்னையில் இருந்து மட்டும், வாரந்தோறும் 500 முதல் 1,000 பேர் வரை காஷ்மீர் செல்வர். இந்த ஆண்டும் விமானத்தில் அதிகம் பேர் செல்ல இருந்தனர். பஹல்காம் அருகே சுற்றுலா பயணியர் மீது நடந்த தாக்குதலால், தற்போது, காஷ்மீர் செல்ல மக்கள் விரும்பவில்லை. ஏற்கனவே சுற்றுலா செல்ல, முன்பதிவு செய்தவர்கள், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். சிலர், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், சிக்கிம் மாநிலம் கேங்டாக், ஹிமாச்சல பிரதேசம் சிம்லா, குலுமணாலி போன்ற ஊர்களுக்கு, தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை