உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு: அரசாணை வெளியீடு

பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: பத்திரிகையாளர்கள் குடும்ப உதவி நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணி காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு, உதவி நிதியாக 10 லட்சம்; 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் குடும்பத்துக்கு, 7.50 லட்சம்.மேலும், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம்; ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் குடும்பத்திற்கு 2.50 லட்சம் ரூபாய் உதவி நிதியாக உயர்த்தப்பட்டுஉள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு முன்பிருந்த தொகை, தற்போது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

எஸ் எஸ்
டிச 20, 2024 17:01

ஏற்கனவே அவர்களுக்கு சலுகை விலையில் அதாவது guidline மதிப்பில் மனைகள் வழங்கப்படுகின்றன


Nandakumar Naidu.
டிச 20, 2024 14:01

ஆமாம், பத்திரிகைக்காரர்களை கொத்தடைமைகளாக வைத்திருந்தால் தானே இவர்களை துதி பாடுவார்கள்? இந்த அறிவிப்பின் மூலம் பத்திரிக்கையாளர்களை பரம்பரை கொத்தடிமைக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள்.


தமிழன்
டிச 20, 2024 14:00

இறந்தவர்களுக்கு பத்திரிகை நிறுவனமே தரட்டும் எதற்கு மக்கள் பணத்தில் இருந்து தர வேண்டும்? ஒரு நிறுவனத்தில் இருந்து பணிபுரியும் ஊழியருக்கு அந்த நிறுவனம் தானே இழப்பு தர வேண்டும். மக்கள் பணத்தை எடுத்து தர மக்கள் அனுமதிக்கலாமா?


தமிழன்
டிச 20, 2024 13:58

பத்திரிகையாளர்கள் என்றால், சமூக வலைதளத்தில் பேசுபவர்களா ?


தமிழன்
டிச 20, 2024 13:58

இனி இதுமாதிரி செய்திகள் வரும் என்று புரிகிறதா


Sidharth
டிச 20, 2024 11:09

திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டத்தை நிராகரிக்கும்


sundarsvpr
டிச 20, 2024 10:59

பத்திரிக்கையாளர்களுக்கு நிதி வழங்குவதை சரியா தவறா என்பதனை தேர்தல் நேரத்தில் மக்கள் புரிந்துகொள்வார்கள். போக்குவரத்துக்கு தொழிலார்கள் போராடிக் கொண்டு இருப்பதும் அரசு அறிந்தும் மௌனம் சாதிப்பதும் தேர்தலில் மக்கள் புரிந்துகொள்வார்கள்.


Karuthu kirukkan
டிச 20, 2024 10:32

ஜனநாயக துரோகம், தேர்தல் வரப்போகிறது தமது அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதக்கூடாது, புகழ்ந்து எழுதவேண்டும் என்பத்ற்காக கொடுக்கப்படும் ஒரு வகையான ஊக்கத்தொகை....


நசி
டிச 20, 2024 09:36

துதி பாட துதி பாட....சபாஷ் மீனா..


Shanmuga Sundaram
டிச 20, 2024 08:34

அரசுக்கு துதிபாடுபவர்களுக்கு அதிக பொற்கிழியை அள்ளிக் கொடுப்பது அரசருக்கு அழகு.


தமிழன்
டிச 20, 2024 14:55

அது அரசு பொற்கிழி அல்ல.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணம்.. நடப்பது மன்னர் ஆட்சியும் இல்லை. இருப்பவர் அரசரும் இல்லை. உங்கள் வரிப்பானத்தில் சம்பளம் வாங்கும் ஒரு மக்கள் தொண்டன்.. கேள்வி கேட்காமல் இப்படி உசுப்பு ஏற்றி விடாமல் கேள்வி கேளுங்கள்.. மக்கள் வரி பணத்தில் எதற்கு ஒரு நிறுவன ஊழியருக்கு நிதி தர வேண்டும்.. என கேளுங்கள்.. திறமை இல்லாதவர் தலைமையில் உள்ள அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள்.. கேலி பேசுவதால் பயன்இல்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை