செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிப்பு
திருப்பூர்:திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில், செயற்கை நுாலிழை ஆடைகளின் பங்களிப்பு 50 சதவீதத்தை தொட்டுவிட்டதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில், 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு தற்போது 50 சதவீதத்தை கடந்துவிட்டது. 'திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு பின்னலாடைகள் உற்பத்தியாகின்றன. தற்போது செயற்கை இழை ஆடைகளின் அளவு 15,000 கோடி ரூபாயை கடந்துள்ளது' என்கின்றனர், பின்னலாடை உற்பத்தியாளர்கள்.